வைட்டமின் குறைபாடுகளால்  உண்டாகும் ஆரோக்கிய சீர்கேடு தெரியுமா?

Do you know the health disorders caused by vitamin deficiencies?
Do you know the health disorders caused by vitamin deficiencies?https://www.onlymyhealth.com

மது உடல் நூறு சதவிகிதம் ஆரோக்கியத்துடன் திகழ புரதம், கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் போன்ற அனைத்து ஊட்டச் சத்துக்களும் குறைவின்றி உடலுக்குக் கிடைப்பது அவசியம். அதில் குறைபாடு உண்டாகும்போது உடல் ஆரோக்கியத்திலும் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு கோளாறுகள் உண்டாவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. வைட்டமின் சத்துக்கள் குறையும்போது ஆரோக்கியத்தில் என்னென்ன குறைபாடுகள் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நம் மனநிலையை (Mood) ஒழுங்குற வைப்பதில் வைட்டமின் Dயின் பங்களிப்பு மிக அதிகம். இதில் குறைபாடு ஏற்படும்போது மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு உருவாகிறது. வைட்டமின் D அதிகரிக்க உடலில் சூரிய ஒளி  தினமும் சிறிது நேரம் படுமாறு செய்வதும், டயட்டரி நார்ச்சத்து உள்ள உணவுகளை உண்பதும் அவசியம். B12 உள்ளிட்ட அனைத்து B வைட்டமின்கள் மற்றும் ஃபொலேட் ஆகிய சத்துக்கள் மூளையின் சிறந்த செயல்பாட்டிற்கு அவசியம் தேவை. இவற்றில் குறை ஏற்படும்போது மன அழுத்தம் வருவதற்கான அறிகுறி தோன்ற ஆரம்பிக்கும்.

ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் நிறைந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு அவசியம் தேவை. இந்தச் சத்து தேவையான அளவு கிடைக்காதபோது மன அழுத்தம் உண்டாகும் நிலை ஆரம்பமாகிறது. மக்னீசியம் சத்துக் குறைபாடும் மன அழுத்தம் மற்றும் கவலையான மனநிலை உருவாகும் அபாயத்தை அதிகரிக்கச் செய்யும். இரும்புச் சத்து குறையும்போது உடல் சோர்வு உண்டாகும்; அறிவாற்றல் குறையும்; மனநிலை சம நிலையிலிருந்து மாறுபடும். இவை அனைத்தும் மன அழுத்தம் உண்டாகும் சூழலை உருவாக்கும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளை வீட்டு வேலைகள் செய்யப் பழக்குவது எப்படி?
Do you know the health disorders caused by vitamin deficiencies?

சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டான வைட்டமின் Cயானது மூளையின் நிறைவான ஆரோக்கியத்திற்கும், மனநிலையை சமமாக வைத்துப் பாராமரிக்கவும் உதவி புரியும்.  வைட்டமின் C சத்து குறையும்போது மன அழுத்தம் மற்றும் கவலையான மனநிலை உருவாகும் அபாயம் உண்டாகிறது. சிங்க் சத்து குறையும்போது மன நிலையில் கோளாறுகளும் மனஅழுத்தம் உருவாகும் வாய்ப்பும்  ஏற்படுகிறது.

இவ்வாறான கோளாறுகள் எதுவுமின்றி நம் மனமும் உடலும் ஆரோக்கியம் நிறைந்து நிற்க அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவுகளை சரிவிகிதத்தில் உட்கொண்டு சமநிலை பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com