சிறுதானிய உணவுகளை நினைத்தே பார்க்கக் கூடாத நான்கு பேர் யார் தெரியுமா?

Small grain foods
Small grain foods
Published on

ம்பு, கேழ்வரகு, சாமை, தினை, பனிவரகு, சோளம் உள்ளிட்ட சிறுதானிய வகை உணவுகள் நமது பாரம்பரியத்துடன் தொடர்புடையவை. நீரிழிவு, எடை அதிகரிப்பு, உடல் பருமன், வாயு, மலச்சிக்கல், கல்லீரல் மற்றும் இதய பிரச்னைகளை கட்டுப்படுத்த சிறுதானிய உணவுகள் பெரிதும் உதவுகின்றன. ஆனால், இந்த சிறுதானிய உணவுகளை ஒருசிலர் உண்ணலாம் என ஒருசிலர் நினைத்தே பார்க்கக் கூடாது. அந்த நான்கு பேர் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சரும அலர்ஜி: சிலருக்கு சிறுதானிய உணவுகளைச் சாப்பிடுவது அலர்ஜியாக இருக்கலாம். சரும அரிப்பு, ஆஸ்துமா, இரைப்பை குடல் பிரச்னைகள் போன்றவை இந்த ஒவ்வாமையின் அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறி இருப்பவர்கள் சிறு தானிய உணவுகளை சாப்பிடாமல் இருப்பதே நலம் பயக்கும்.

செலியாக் நோய் உள்ளவர்கள்: செலியாக் நோய் உள்ளவர்கள் கோதுமை மற்றும் பார்லி போன்ற பசையம் உள்ள உணவுகளை சாப்பிடக் கூடாது. சில சிறுதானியங்களிலும் பசையம் இருக்கலாம் என்பதால், கவனத்துடன் இருக்க வேண்டும்.

இரைப்பை குடல் பிரச்னை உள்ளவர்கள்: சிறுதானிய உணவுகள் சிலருக்கு ஜீரணிக்கக் கடினமாக இருக்கலாம். இது வாயு, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. ஆகையால், இரைப்பை குடல் பிரச்னை உள்ளவர்கள் சிறு தானிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
மாணவர்கள் ஹேர் கலரிங் மற்றும் மேக்கப் போட்டுக்கொள்ள தடை விதித்துள்ள நாடுகள்!
Small grain foods

ஹைப்பர் தைராய்டிசம்: ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்கள் சிறுதானிய உணவுகளை உட்கொள்ளக்கூடாது. அப்படியே சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், குறைவாக சாப்பிடுவது நல்லது. இது தைராய்டு எதிர்ப்புப் பண்புகளை அதிகரிக்கிறது.

மேற்கண்ட நான்கு வகை உடல் பிரச்னை இருப்பவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே சிறுதானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com