சிக்கலின்றி 'பூப்' (Poop) போக உதவும் 5 பானங்கள்... அப்பாடா இனி No Tension!

5 types of drinks that help you poop
5 types of drinks that help you poop
Published on

நம் உடலின் இயல்பான இயக்கங்களில் ஒன்று கழிவுகளை வெளியேற்றுவது. அதாவது மலம் கழிப்பது. இயல்பாக நடைபெற வேண்டிய இச் செயல் சிலருக்கு பிரச்னையாகி விடுவதும் உண்டு. அதற்கு, "தண்ணி நிறைய குடிங்க. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்க" என்று பிறர் ஆலோசனை கூற ஆரம்பிப்பர். மலச்சிக்கல் பிரச்னை நீங்க மருத்துவர் ஒருவர் புத்துணர்ச்சி தரும் 5 வகை பானங்களை அருந்தும்படி அறிவுறுத்துகிறார். அந்த ஐந்து வகையான பானங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

1. சியா ஃபிரெஸ்கா (Chia Fresca):

மூன்று பொருள்களை உபயோகித்து இந்த ட்ரிங்கை நாம் தயாரிக்கலாம். ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகளை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து அதை ஒரு கிளாஸ் டம்ளரில் போடவும். டம்ளரின் முக்கால் பாகம் வரை தண்ணீர் சேர்க்கவும். அதனுடன் ஒரு ஃபிரஷ் எலுமிச்சம் பழத்தின் ஜூஸை பிழிந்து விடவும். சியா விதைகளில் அதிகளவில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்தானது மலம் சுலபமாக வெளியேற உதவும். எலுமிச்சம் ஜூஸ் ஜீரணத்தை ஊக்குவிக்கவும், சுவைக்காகவும் சேர்க்கப்படுகிறது.

2. சோர்பிடால் ரிச் ஜூஸ் (Sorbitol-rich juice):

சோர்பிடால் எனப்படும் சுகர் ஆல்கஹால் நிறைந்த புரூனே, பியர் மற்றும் ஆப்பிள் பழ ஜூஸ்கள் இதில் அடங்கும். இவ்வகை ஜூஸ்கள் இயற்கையாகவே மலமிளக்கும் குணம் கொண்டவை. இப்பழங்களில் ஏதாவது ஒன்றை ஜூஸாக்கி அருந்தலாம் அல்லது மூன்றையும் கலந்தும் ஜூஸ் செய்து குடிக்கலாம். சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை. சோர்பிடால் தண்ணீரை உள்ளிழுத்து குடலுக்குள் சேர்த்து, கழிவுகளை மிருதுவாக்கவும், அவை சுலபமாக மலக் குடல் வழியே வெளியேறவும் உதவி புரியும்.

3. மூலிகை டீ:

நீங்கள் மூலிகை டீ பிரியரானால், சென்னா (Senna) டீ அல்லது பெப்பர்மிண்ட் டீ அருந்தி மலச்சிக்கலுக்கு தீர்வு காணலாம். சூடான பானம், பவல் (Bowel) இயக்கங்களை ஊக்குவிக்க உதவும். பெப்பர்மிண்ட் டீ, வயிறு வீக்கம், வாய்வு போன்ற தொல்லைகளையும் குணப்படுத்த உதவி புரியும்.

4. ஸைலியம் ஹஸ்க் ட்ரிங்க் (Psyllium husk drink):

ஸைலியம் ஹஸ்க் என்பது ஒரு நார்ச்சத்து தரக்கூடிய சப்ளிமெண்ட். இதை தண்ணீரிலோ அல்லது ஏதாவதொரு ஜுஸிலோ, சர்க்கரை சேர்க்காமல் கலந்து குடிக்கலாம். இதைக் குடித்த பின், கழிவுகள் இறுகுவதைத் தடுக்க நிறைய நீர் அருந்துவது அவசியம்.

5. காஃபின்:

காலையில் அருந்தும் ஒரு கப் டீ அல்லது காப்பியில் இருக்கும் காஃபின் நம் உறக்கத்தைக் கலைக்க மட்டுமின்றி, பூப் போகத் தயாராவதற்கும் உதவக் கூடியது. காஃபின், பெருங்குடலில் மலத்தை வெளியேற்றும் அனிச்சை இயக்கம் (gastrocolic reflex) உருவாக உதவி புரிகிறது. இதனால் பவல் மூவ்மென்ட் ஊக்குவிக்கப்பட்டு மலம் சுலபமாக வெளியேறும்.

முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.

இதையும் படியுங்கள்:
சமையல் முறைகளில் எதில் ஆரோக்கியம் அதிகம் தெரிந்து கொள்வோமா..!
5 types of drinks that help you poop

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com