க்ரூசிஃபெரஸ் வெஜிடபிள்ஸ் பற்றி தெரியுமா?

Do you know about Cruciferous Vegetables?
Do you know about Cruciferous Vegetables?https://health.clevelandclinic.org

க்ரூசிஃபெரஸ் வெஜிடபிள்ஸ் என்பது நான்கு இதழ்கள் கொண்டு, கிராஸ் (cross) வடிவில் பூக்கும் பூக்களிலிருந்து தோன்றி வளரும் காய்களாகும். காலிஃபிளவர், புரோக்கோலி, முட்டைகோஸ், காலே, போக்சோய், அருகுலா, ப்ரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரௌட்ஸ் போன்றவை இந்த வகையைச் சேரும். இவற்றில் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மிக அதிகம் உள்ளன. ஃபோலேட், கரோட்டீனாய்ட், வைட்டமின் C, E, K மற்றும் நார்ச்சத்து நிரம்பியவை; கேன்சரை எதிர்த்துப் போராடும் குணம் கொண்டவை; இதய ஆரோக்கியம் காக்கக் கூடியவை.

புரோக்கோலியில் வைட்டமின் C, பொட்டாசியம், வைட்டமின் B6  மற்றும் ஃபோலேட் ஆகிய சத்துக்கள் உள்ளன. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கிறது. அதிலுள்ள சல்ஃபோரஃபேன் (sulforaphane) கெட்ட கொழுப்புகளின் அளவைக் குறைக்க உதவுகிறது.

முட்டைகோஸில் வைட்டமின் A மற்றும் B6 அதிகம் நிறைந்துள்ளது. அதிலுள்ள அன்த்தோஸியானின் என்ற பொருள் இரத்த நாளங்களில் கொழுப்பு சேர்வதைத் தடுத்து இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

காலேயில் வைட்டமின் A, K, ஃபோலேட், கரோட்டீனாய்ட், மக்னீசியம், ஃபிளவோனாய்ட் மற்றும் கேம்ப்ஃபெரால் (Kaempferol) ஆகிய சத்துக்கள் உள்ளன. இதிலுள்ள ஃபைபர் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது கெட்ட கொழுப்பைக் குறைக்க வல்லவை.

ப்ரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரௌட்ஸில் பொட்டாசியம், புரதம், இரும்புச் சத்து ஆகியவை நிறைந்திருக்கின்றன. இவை மொத்த உடலுக்கும் ஆரோக்கியம் தருகின்றன.

இதையும் படியுங்கள்:
உடலுக்குச் சிறந்தது ஒமேகா 3 அமிலமா? ஒமேகா 6 அமிலமா?
Do you know about Cruciferous Vegetables?

அருகுலாவில் ஃபைபர் மற்றும் ஃபைட்டோகெமிக்கல்கள் அதிகம். சர்க்கரை, கொழுப்பு, கலோரி, கார்போஹைட்ரேட் போன்றவை குறைவாகக் கொண்டது. வைட்டமின் A, K, C, ஃபோலேட், கால்சியம், பொட்டாஸியம் ஆகிய சத்துக்களையும் கொண்டது. கேன்சரை எதிர்த்துப் போராடும் குணம் கொண்டது.

காலிஃபிளவர் வீக்கத்தைக் குறைக்கும். இதய நோய் மற்றும் கேன்சரை எதிர்த்துப் போராடும். நச்சுக்களை நீக்கவும், எடை குறைக்கவும் உதவும். வயதாவதை மறைத்து இளமைத் தோற்றம் தரும்.

இவ்வாறான நற்பயன்கள் தரக்கூடிய க்ரூஸிஃபெரஸ் வெஜிடபிள்ஸ்களை அடிக்கடி உணவில் சேர்த்து ஆரோக்கியம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com