‘ஜங்கிள் ஜிலேபி’ எனப்படும் கொடிக்காய்ப் புளி பழம் பற்றி தெரியுமா?

Do you know about Kodukkapuli fruit?
Do you know about Kodukkapuli fruit?https://tamil.krishijagran.com

கொடிக்காய்ப் புளி என தமிழில் கூறப்படும் இப்பழ மரமானது வெப்ப மண்டலப் பிரதேசத்தில் வளரக் கூடியது. தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் இது காணப்படுகிறது. இப்பழம் கொத்துக் கொத்தாய்க் காய்க்கும். நல்ல இனிப்பு சுவையுடையது. இப்பழத்தில் கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன், கரையக்கூடிய நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், சபோனின் போன்ற ஃபைட்டோ கெமிகல், ஃபிளவனாய்ட், ஃபினால்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

இதிலுள்ள வைட்டமின்கள் A மற்றும் C பார்வைத் திறனை மேம்படுத்தவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவி புரிகின்றன. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஸ்ட்ரெஸ் மற்றும் வீக்கத்திற்கு எதிராகப் போராடி இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுக்கின்றன.

இதிலுள்ள நார்ச்சத்தானது செரிமானம் சிறப்பாக நடைபெற உதவிபுரிந்து, மலச்சிக்கலையும் நீக்குகிறது. மேலும், நீண்ட நேரம் பசி ஏற்படாத உணர்வைக் கொடுத்து, உட்கொள்ளும் கலோரி அளவைக் குறைக்கிறது. இதன் மூலம் எடையை சம நிலையில் பராமரிக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
இல்லறம் நல்லறமாக நாம் செய்ய வேண்டியது என்ன?
Do you know about Kodukkapuli fruit?

இதன் ஹைப்போ க்ளைஸெமிக் குணமானது இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. இப்பழம் வயிற்றில் உருவாகும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் ஃபங்கஸ்களை அழிக்க உதவுகின்றன. இரத்த ஓட்டம் சீராகவும், இரத்தக் குழாய்களில் உண்டாகும் இரத்த உறைவைத் தடுக்கவும் உதவி புரிகிறது. அல்சர் உண்டாகும் ஆபத்தையும் தடுக்கிறது. இத்தனை நன்மைகள் தரும் ஜங்கிள் ஜிலேபி பழத்தை கிடைக்கும்போது உட்கொண்டு நலம் பல பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com