ஞாபக சக்தியை அதிகரிக்கும் பத்து சூப்பர் உணவுகள் பற்றி தெரியுமா?

Do you know about ten super foods that boost memory power?
Do you know about ten super foods that boost memory power?https://www.nakkheeran.in

ஞாபக சக்தி என்பது எல்லோருக்குமே மிகவும் அவசியமான ஒன்று. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தன் பாடங்களை மறக்காமல் நினைவில் வைத்திருப்பது அவசியம். அதுபோல, பெரியவர்களுக்கும் ஞாபக சக்தி அன்றாட வாழ்வில் மிகவும் அவசியம். ‘பர்ஸ் எங்க வெச்சேன்? ஹெல்மெட் எங்க வெச்சேன்?’ என்று தேடும் ஆண்களும், ’சாம்பார்ல உப்பு போட்டேனா இல்லையா?’ என்று குழம்பும் பெண்களும் அதிகம். வயதானால் ஞாபக மறதி வருவது சகஜம். ஆனால், ஞாபக சக்தி அதிகரிக்கும் உணவுகளை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. ப்ளூ பெர்ரி: ப்ளூ பெர்ரியில் இயற்கையாகவே ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. இது மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. எனவே, தினமும் இவற்றை எடுத்துக் கொண்டால் வயதான பின்பு கூட ஞாபக சக்தி நன்றாக இருக்கும்.

2. மீன் வகைகள்: சால்மன், சார்டைன் போன்றவற்றில் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றன. நன்றாக ஞாபக சக்தியை வளர்க்கின்றன.

3. புரோக்கோலி: இதில் உள்ள வைட்டமின் கே மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மூளை சிறப்பாக பணிபுரிவதற்கு உதவுகின்றன. ஞாபக சக்தியும் அதிகரிக்கிறது.

4. பூசணி விதைகள்: இதில் உள்ள மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் மாங்கனிசு முதலிய சத்துக்கள் ஞாபக சக்தியை வளர்க்கின்றன. மூளையில் உள்ள நரம்புகளை நன்றாக பணி செய்யத் தூண்டுகின்றன.

5. டார்க் சாக்லேட்: இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கின்றன.

6. உலர் பழங்கள்: வால்நட், பாதாம் போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் ஆன்டி ஆக்சிடன்டுகளும் வைட்டமின் கே சத்தும் உள்ளன. இவை வயதானால் ஏற்படும் ஞாபக மறதியை தடுக்கின்றன. இவற்றை தினமும் எடுத்துக்கொண்டால் வயதான பின்பு கூட ஞாபக சக்தி நன்றாக இருக்கும்.

7. ஆரஞ்சு: இதில் உள்ள வைட்டமின் சி மூளையை சுறுசுறுப்பாக வைக்கிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது. மூளையின் செயல்பாட்டை நன்றாக வைப்பதால் ஞாபக சக்தி குறையாமல் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியை பறிக்கும் தேவையில்லாத பத்து பழக்க வழக்கங்கள்!
Do you know about ten super foods that boost memory power?

8. முட்டை: இதில் உள்ள பல்வேறு சத்துக்கள் மூளையை ஆரோக்கியமாக வைக்கின்றன. இவற்றில் வைட்டமின் பி 6, பி 12, கோலின் போன்றவை நிறைந்திருப்பதால் மூளை ஆரோக்கியமாக வேலை செய்யும்.

9. மஞ்சள்: இதில் உள்ள குராகுமின் என்கிற பொருள் நோய் எதிர்ப்பு சக்தியை தருவதுடன் ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது.

10. அவகோடா: இதில் உள்ள மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகின்றன. இவற்றில் வைட்டமின் கே, விட்டமின் ஈ மற்றும் ஃபோலேட் முதலியவை ஞாபக சக்தியை தூண்டுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com