நுண்கீரைகளின் அற்புத பலன்கள் பற்றி தெரியுமா?

Microgreens
Microgreenshttps://www.healthifyme.com

பொதுவாக, காய்கறிகள் மற்றும் கீரைகளை வளர்த்து அறுவடை செய்ய சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும். ஆனால், மைக்ரோகிரீன்கள் (Microgreens) எனப்படும் நுண்கீரைகள் உண்ணக்கூடிய காய்கறிகள் மற்றும் மூலிகைகளின் இளம் நாற்றுகள். விதைகள் போட்டு இலைகள் வளர்ந்ததும் ஏழிலிருந்து 21 நாட்களுக்குள் அறுவடை செய்து, அவற்றை உண்ணலாம். இவை காய்கறிகள், மூலிகைகள், தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான விதைகளில் இருந்து வளர்க்கப்படுகின்றன.

மைக்ரோகிரீன்களின் சிறப்பியல்புகள்:

1. அருகுலா, துளசி, கீரைகள், முள்ளங்கி, கொத்தமல்லி, கடுகுக் கீரை, பட்டாணி, முட்டைகோஸ் போன்றவற்றின் இளம் நாற்றுக்கள் மைக்ரோகிரீன்கள் வகையில் வருகின்றன. இவை ஒன்று முதல் மூன்று அங்குலம் உயரம் வரை வளரும்.

2. மைக்ரோகிரீன்கள் அவற்றின் அருமையான சுவை, துடிப்பான நிறம், ஊட்டச்சத்து ஆகிய சிறப்புகளைக் கொண்டது.  இவை நார்மலான காய்கறிகளை விட அதிக வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டிருக்கும்.

3. மைக்ரோகிரீன்களில் வைட்டமின் சி, ஈ, கே, தாதுக்கள், இரும்பு, துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும், ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டுள்ளன. சாதாரண காய்கறிகளை விட இவற்றில் சத்துக்கள் அதிகம்.

 4. உடலின் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கும். உடலில் வீக்கத்தைக் குறைக்கும். புற்றுநோய் செயல்பாட்டை தடுக்க அல்லது குறைக்க உதவும். இவை புற்றுநோய் உயிரணு வளர்ச்சி மற்றும் பெருக்கத்தை கட்டுப்படுத்துகின்றன.

5. கல்லீரலின்  நச்சுத்தன்மையை அகற்றி உடலுக்கு ஆரோக்கியம் தரும். அதிகமான அழற்சி எதிர்ப்பு ஊட்டச்சத்துக்களை இவை கொண்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
டைரி எழுதுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
Microgreens

6. இவற்றில் கலோரிகள் அதிகமாக உள்ளன. கொழுப்பு சுத்தமாக இல்லை. சோடியம், கார்போஹைட்ரேட் நார்ச்சத்து, புரதம் போன்றவை உள்ளன.

7.  சராசரியாக மைக்ரோகிரீன்கள் வழக்கமான காய்களை விட  நான்கு முதல் ஆறு மடங்கு அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன என ஆய்வுகள் சொல்கின்றன. மேலும், இவற்றின் சுவையும் அலாதியாக இருக்கும்.

இவற்றை எப்படி உணவில் சேர்ப்பது?: சாண்ட்விச், வீட்டில் தயாரிக்கப்படும் ஸ்மூத்திகள், சூப்புகள், சாலடுகள் போன்றவற்றில் பயன்படுத்தலாம். உணவுப் பொருட்களின் அலங்காரத்திற்குப் பயன்படுத்தலாம். இவற்றை வெளியில் வாங்கும்போது விலை அதிகமாக இருக்கலாம். எனவே, வீட்டிலேயே இவற்றை தொட்டி செடிகளில் வளர்த்து அறுவடை செய்து உண்ணலாம். இதிலுள்ள இலைகள் மிகவும் மென்மையானவை. எனவே, இலைகளை மிக ஜாக்கிரதையாக ஈரத்துணி கொண்டு மென்மையாகத் துடைத்தெடுக்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com