'Blue Tea'ன்னா என்ன? இத எதுக்கு குடிக்கணும்?

Blue tea
Blue tea
Published on

சங்கு பூவை பயன்படுத்தி செய்யக்கூடிய டீயை தான் 'Blue tea' என்று சொல்கிறோம். உடல் ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்த நினைப்பவர்கள் சங்கு பூ டீயை குடிக்கலாம். இப்பதிவில் சங்கு பூ தேநீரின் நன்மைகளைப் பற்றி காண்போம்.

1. ஆன்டி டையாபெடிக் properties அதிகம் கொண்டது சங்கு பூ. சர்க்கரை நோயால் அவதிப்படுபவர் இந்த சங்கு பூ டீயை குடித்து வர ரத்த சர்க்கரை அளவு சீராகும். அதுமட்டுமில்லாமல் Anthocyanin என்று சொல்லக்கூடிய ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைய இருக்கிறது. இது கண் ரெட்டினா செல்கள் பாதிப்படையாமல் தடுக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய கண் பார்வை இழப்பை வராமல் தடுக்கக்கூடியது இந்த சங்கு பூ தேநீர்.

2. சங்கு பூ டீயை சக்தி வாய்ந்த மெமரி பூஸ்டர் என்று சொல்கிறார்கள். ஏனெனில், இது மூளையின் செயல் திறனை அதிகரிக்கும். மேலும் நியாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய ரசாயன மாற்றத்தை மூளையில் ஏற்படுத்தக்கூடியது இந்த ப்ளூ டீயாகும். வயது காரணமாக நியாபக மறதி பிரச்னையில் அவதிப்படுபவர்கள் இந்த டீயை குடித்து வருவது மிகவும் நல்லது.

3. அதிக வேலைக் காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்க உதவும். டிப்ரஸன், ஸ்ட்ரெஸ் போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு இந்த சங்கு பூ தேநீர் மிகவும் நல்லது. Happy hormones என்று சொல்லக்கூடிய டோபமைன், செரட்டோனின், ஆக்ஸிடோசின், என்டார்பின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து மனக்கவலையை உடனடியாக போக்கக்கூடிய ஆற்றல் இந்த தேநீருக்கு உண்டு. இதன் காரணமாக இந்த ப்ளூ டீயை Mood enhancer என்று சொல்கிறார்கள்.

4. சங்கு பூ தேநீரில் ஆன்டி கேன்சர் Properties அதிக அளவில் நிறைந்திருக்கிறது. கேன்சர் செல்களை அழிக்கக்கூடிய Anthocyanins, polyphenol, flavonoids போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. இது கேன்சர் செல்கள் உடலில் உருவாவதற்கு காரணமான ப்ரீ ரேடிக்கலை உடலில் இருந்து வெளியேற்றி கேன்சர் வராமல் தடுக்கும்.

5. அதிக உடல் எடையினால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் நல்லது இந்த சங்கு பூ தேநீர். இதில் இருக்கக்கூடிய EGCG Catechin உடலில் இருக்கும் கலோரிகளை எரிக்கும் ஆற்றலைக் கொண்டது. இதனால் உடல் எடை நன்றாக குறையும். அடி வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்கும் ஆற்றலும் இந்த சங்கு பூ தேநீருக்கு உண்டு.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

இதையும் படியுங்கள்:
தூக்கத்தை தூண்டும் 5 உணவு வகைகள்!
Blue tea

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com