அரிவாள் உயிரணு நோய் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றித் தெரியுமா?

அரிவாள் உயிரணுபாதிப்பு
அரிவாள் உயிரணுபாதிப்பு

லக அரிவாள் செல் தினம் ஒவ்வொரு வருடமும் ஜூன் 19ம் தேதி அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2008ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டுவரும் அரிவாள் செல் நோய் (Sickle Cell disease) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் உதவுகிறது. அரிவாள் உயிரணு நோய் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

அரிவாள் உயிரணு நோய் என்பது பொதுவான மரபணு இரத்தக் கோளாறினால் விளையும் ஒரு நோய். இது ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகளை பாதிக்கிறது. மிகவும் பொதுவான வகை அரிவாள் செல் இரத்த சோகை என அழைக்கப்படுகிறது. இது இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் புரதமான ஹீமோகுளோபினில் ஒரு அசாதாரணத்தை விளைவிக்கிறது.

அரிவாள் செல் நோய் என்பது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் ‘சி’ அல்லது அரிவாள் வடிவத்தில் மாறுவதைக் குறிக்கிறது. இந்த ஆரோக்கியமற்ற செல்கள் விரைவில் அழிந்து உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. இதனால் பலவிதமான ஆரோக்கியக் கேடுகள் உண்டாகும். எஸ்.டி.சி. உடன் பிறக்கும் குழந்தைகளை போதுமான அளவு கவனம் கொடுத்து வளர்ப்பது மிகவும் அவசியம்.

அரிவாள் உயிரணு நோய் ஏற்படுத்தும் பாதிப்புகள்:

1. இந்த நோய் மரபணு காரணமாக பெற்றோரிடம் இருந்து குழந்தைக்கு வரலாம். அரிவாள் உயிரணு நோயில் உள்ள பிரச்னைகள் பொதுவாக பிறந்த 5 முதல் 6 மாத காலத்தில் தொடங்கும். இது இரத்த நாளங்களில் இரத்த ஓட்டத்தை தடுக்கும் வல்லமை படைத்தது. இதனால் இது உடலில் வலியை ஏற்படுத்தும் மற்றும் உடலின் உள்ளுறுப்புகள் மற்றும் திசுக்களை சேதப்படுத்தும்.

2. குறைந்த இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையால் இரத்த சோகை, கை கால்களில் வீக்கம், அடிக்கடி தொற்று நோய்களின் பாதிப்பு, குழந்தைகளின் வளர்ச்சி தாமதமாவது, பார்வை சம்பந்தப்பட்ட பிரச்னைகள், கைகள் மற்றும் கால்களில் வீக்கம், உடலில் வலி போன்றவை ஏற்படும்.

3. பெரியவர்களுக்கு பக்கவாதம், கடுமையான மார்பு நோய்க்குறி, கல்லீரல் மண்ணீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள், கால்களில் புண்கள், பித்தப்பை கற்கள் முதலிவை தோன்றும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளை எளிதாகப் படிக்க வைக்கும் 6 ஐடியாக்கள்!
அரிவாள் உயிரணுபாதிப்பு

சிகிச்சை முறைகள்: குழந்தைகளை பாக்டீரியாத் தொற்றுகளில் இருந்து காத்துக்கொள்ள குழந்தை பருவத்தில் இருந்து ஐந்து வயது வரை பென்சிலின் தடுப்பு மருந்து போட வேண்டும். உலகெங்கிலும் பல இறப்புகளுக்கு எஸ்டிசி நோய் காரணமாக இருந்தாலும், இது தொற்றக்கூடிய நோய் அல்ல. சில நோயாளிகளை முழுமையாக குணப்படுத்த முடியும். ஆனால், மிகவும் சிக்கலான எலும்பு மஜ்ஜை மாற்று (Bone Marrow Transplantation) செயல்முறையை இந்த சிகிச்சை உள்ளடக்கியதால் இது மிகவும் ஆபத்தானது. மேலும். இது விலை உயர்ந்த ஒரு சிகிச்சையாகும்.

அரிவாள் உயிரணு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை: சரியான அளவு நீர் அருந்துதல், சீரான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, தீவிர வெப்பநிலையை தவிர்ப்பது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். அதிக உயரமான இடத்தில் நின்று கீழே பாரப்பதை இவர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில், குறைவான இரத்தம் உள்ள காரணமாக இவர்களுக்கு சட்டென தலை சுற்றி கீழே விழும் அபாயம் ஏற்படலாம். மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறையை கடைபிடித்தல் வேண்டும். இவர்கள் கடுமையான, தீவிர உடற்பயிற்சி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com