நம் எல்லோருக்கும் பாதாம், முந்திரி மற்றும் வால் நட்ஸ் பற்றித் தெரியும். ஆனால் டைகர் நட்ஸ் பற்றி அதிகமாகத் தெரியாது. இதனை சுஃபா என்றும் அழைப்பார்கள். எகிப்தில் மட்டுமே கிடைத்த இது தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்துவிட்டது. பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
இதன் நன்மைகள்:
மலச்சிக்கலைத் தீர்த்து செரிமான சக்தியை சீராக்குகிறது. இதில் நார்சத்து அதிகம் உள்ளதால் செரிமான மண்டலத்திற்கு சிறந்தது. மேலும் இது வயிறு உப்புசம் மற்றும் டயரியா போன்றவற்றைத் தடுக்கிறது. உடல் எடையைக் குறைக்கவும் மற்றும் கொலஸ்டிரால் அளவை சீராகவும் வைக்கிறது.
இதை உட்கொள்வதால் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துவதால் பசியைக் கட்டுப்படுத்துகிறது.
இதில் உள்ள கரையாத நார்சத்து இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துகிறது.
இதன் ஊட்டச்சத்து இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. கெட்ட கொலஸ்டிராலை நீக்குகிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம் படுத்தப்படுகிறது. இதய சம்பந்தமான பிரச்னைகளைத் தடுக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
ஆண்மைக் குறைவுக்கான சிறந்த மருந்தாக இது கருதப்படுகிறது.
ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
இதில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு மிகச்சிறந்தது.
டைகர் நட்ஸ் பசும்பாலுக்குச் சிறந்த மாற்றாக கருதப்படுகிறது. இதில் கால்ஷியம் சத்து அதிகமாக உள்ளதால் எலும்புகளின் வளர்ச்சிக்குச் சிறந்தது. இதில் பசும் பாலில் இல்லாத வைட்டமின்கள் சி யும், ஈ யும் உள்ளன.
இதில் கணிசமான மக்னீசியம் சத்து இருப்பதால் இதயத்துடிப்பை சீராக வைக்கிறது. நரம்பு மற்றும் தசைகள் வலுவடையும் செய்கிறது.
ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் நிறைந்தது. இதன் மூலம் வயதான தோற்றத்தைத் தடுத்து முகசுருக்கங்களை நீக்குகிறது.
இது குடல் புற்றுநோயைத் தடுக்கிறது.