நாம் உட்கொள்ளும் உணவுகள் மூலம் நம் உடலுக்கு பலவித நன்மைகள் உண்டாவதுடன், LDL என்னும் கெட்ட கொழுப்புகளும் உள் சென்று, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், செரிமானக் கோளாறு போன்ற அசௌகரியங்களை உண்டுபண்ணும் வாய்ப்பும் உருவாகிறது. உடலுக்குள் உருவாகும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க நாம் உண்ண வேண்டிய எட்டு வகைக் காய்கறிகள் எவை என்பதைப் பார்ப்போம்.
முட்டைகோஸில் அதிகளவு நார்ச்சத்தும், வைட்டமின் Cயும் அடங்கியுள்ளன. அவை கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவுகிறது.
பசலைக்கீரையில் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரக்கூடிய வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்துள்ளன. அவை கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவி புரிகின்றன.
பாகற்காயில் இரத்தத்தை சுத்திகரிக்கும் குணம் உள்ளது. இது இதயத்தின் செயல்பாடுகள் சிறப்புற இயங்க உதவுகிறது. மேலும், பாகற்காய் உடலில் அதிகளவில் இருக்கும் கெட்ட கொழுப்பையும் இரத்த சர்க்கரை அளவையும் குறைக்க வல்லது.
புரோக்கோலி அதிக நார்ச்சத்தும் வைட்டமின் C சத்தும் அடங்கிய காய். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் இதன் பங்கு அளப்பரியது.
கேரட்டில் நார்ச்சத்தும் பீட்டா கரோட்டீனும் அதிகம் உள்ளது. பீட்டா கரோட்டீன் கெட்ட கொழுப்புகளைக் கரைப்பதில் உதவி புரிகிறது.
பீட்ரூட்டில் கரையாத மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து மிக அதிகம். இதுவும் கெட்ட கொழுப்பை கரைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.
அஸ்பராகஸ் (Asparagus) என்ற காயில் வைட்டமின்களும் மினரல்களும் மிக அதிக அளவில் உள்ளன. மேலும், இதிலுள்ள நார்ச்சத்து குடலிலுள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. உடலின் வீக்கத்தையும், கெட்ட கொழுப்பையும் குறைத்து, இதயம் ஆரோக்கியம் பெற உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சமப்படுத்தி நன்மை தருகிறது.