மாதவிடாய் வலியைப் போக்கும் ‘ஆஹா’ பழங்கள் தெரியுமா?

Do you know fruits that relieve menstrual pain?
Do you know fruits that relieve menstrual pain?https://www.thespruceeats.com

மாதவிடாய் காலத்தில் பெண்கள் மிகவும் சோர்ந்து போய் இருப்பார்கள். அவர்களுக்கு சரியான அளவு போஷாக்கை தருவதில் பழங்களுக்கு பெரும் பங்கு உண்டு. அப்படி போஷாக்குக்காக எடுத்துக்கொள்ள வேண்டிய பழங்களையும் உண்ணக் கூடாத பழங்களையும் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

ஆப்பிள்: பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவு ஆப்பிளில் உள்ளதால் உடலுக்கு வலுவூட்டவும், இரத்தத்தை தூய்மைப்படுத்தவும் இந்த சத்துக்கள் பெரிதும் உதவுகின்றன. பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை தணியச் செய்ய ஆப்பிளை உட்கொண்டால் போதும். பெண்களை பொறுத்தவரையில் அவர்கள் தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் முகத்தில் அலாதியான கவர்ச்சி உண்டாகும். மேலும், மேனி அழகும் கூடும்.

மாம்பழம்: மாதவிலக்கு கோளாறுகளினால் துன்புறுவோருக்கு மாம்பழத் தோலை கொண்டு செய்யப்பட்ட கஷாயம் நல்ல மருந்தாகும். இந்த கஷாயத்தில் சிறிதளவு தேனையும் கலந்து காலையிலும், மாலையிலும் பருகி வந்தால் மாதவிலக்கு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். மாம்பழம் மூளைக்கு மட்டுமின்றி, உடலுக்கும் வலுவை கொடுப்பதாகும். கருவுற்றிருக்கும் தாய்மார்கள் நன்கு கனிந்த மாம்பழங்களை இடை இடையே சாப்பிட்டு வர வேண்டும். நன்கு பழுத்த பழங்களிலிருந்தும், நன்கு கனியாத பழங்களிலிருந்தும் சாறு எடுத்து இரண்டையும் கலந்து அதில் சிறிதளவு தேன் சேர்த்து கர்ப்பிணிகளுக்குக் கொடுத்து வந்தால் கரு வளர்ச்சி நன்றாக இருக்கும். மாம்பழம் உடல் சூடு கொடுக்கக் கூடியது. எனவே, அளவோடுதான் சாப்பிட வேண்டும். பெண்கள் மாதவிலக்கு நாட்களில் மாம்பழத்தை சாப்பிடக் கூடாது. மாம்பழம் சாப்பிட்டால் போக்கு அதிகமாகி துன்பமடைய நேரிடும்.

இதையும் படியுங்கள்:
வசீகரத் தோற்றம் தரும் 8 விதமான உடல் மொழிகள் பற்றி தெரியுமா?
Do you know fruits that relieve menstrual pain?

அன்னாசிப்பழம்: அன்னாசி பழத்தை தோல் சீவி துண்டு துண்டுகளாக்கி இரவில் தேனில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிட வேண்டும். இவ்விதம் தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் பித்த சம்பந்தமான நோய்கள் நிச்சயமாக அகலும். உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். இந்தப் பழம் நம் உடம்பில் சேரும் கழிவையும் நச்சுப் பொருட்களையும் போக்கும். ஆனால், வெறும் வயிற்றில் சாப்பிடாமல் இருப்பது நலம். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் போக இந்தப் பழம் பெரிதும் உதவுகிறது. அதேபோல், மாதவிடாய் காலங்களில் பெண்கள் இந்தப் பழத்தை சாப்பிடக்கூடாது. இதேபோல, மூல நோய் உள்ளவர்களும் இதை சாப்பிடக்கூடாது.

திராட்சை: திராட்சையில் புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், கார்போஹைட்ரேட்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி நிறைந்து காணப்படும் திராட்சையை முடிந்தளவு உட்கொண்டால் நோய் நொடி இன்றி வாழலாம். திராட்சை பழத்தை பன்னீரில் முந்தைய நாள் இரவே ஊற வைத்து மறுநாள் அதிகாலையில் உண்டு வர இருதய நோய்கள் குணமாகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொல்லைகள் தீரவும் திராட்சை பழம் நல்ல மருந்தாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com