மனித உடலில் எத்தனை வகையான சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன தெரியுமா?

Do you know how many types of kidney stones are formed in the human body?
Do you know how many types of kidney stones are formed in the human body?https://tamil.boldsky.com
Published on

னித உடலில் சிறுநீரகங்கள் என்பது சிறுநீர் பாதை, சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சிறுநீரகக் கல் ஒரு பொதுவான நோய். இது முதுகில் அல்லது அடிவயிற்றில் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது. இந்தக் கற்கள் தாதுக்கள் மற்றும் உப்புகளால் படிக வடிவில் படிந்து சிறுநீர் பாதையில் எங்கும் உருவாகின்றன. மனித உடலில் எத்தனை வகையான சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்பது பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.

1. கால்சியம் கற்கள்: இந்தக் கற்கள் கால்சியம் ஆக்சலேட், பாஸ்பேட் அல்லது மெலேட் ஆகியவற்றால் ஆனவை. சிறுநீரில் அமிலத்தன்மை இருந்தால், அதாவது குறைந்த pH இருக்கும்போது இவை உருவாகின்றன. சில ஆக்சலேட் சிறுநீரிலும் கல்லீரலிலும் உடலால் உற்பத்தி செய்யப்படுகிறது. கல் உருவாவதில் உணவு முறை முக்கியப் பங்கு வகிக்கிறது. குறைந்த ஆக்சலேட் கொண்ட உணவுகள் கால்சியம் கல் உருவாகும் அபாயத்தைக் குறைக்கும்.

உருளைக்கிழங்கு சிப்ஸ், கீரை, பழங்கள், கொட்டைகள், சாக்லேட் போன்ற பல காய்கறிகளில் ஆக்சலேட் காணப்படுகிறது. அதிக அளவு வைட்டமின் டி, குடல் பைபாஸ் அறுவை சிகிச்சை, வளர்சிதை மாற்றக் கோளாறு போன்றவையும் சிறுநீரில் கால்சியம் ஆக்சலேட்டின் செறிவை அதிகரிக்கிறது. கால்சியம் கல் பாஸ்பேட் வடிவத்திலும் உருவாகிறது. சில வளர்சிதை மாற்ற நிலைகளில் இந்த வகை கல் சிறுநீரகக் குழாயில் அமிலத்தன்மையை உருவாக்குகிறது.

2. யூரிக் அமிலக் கற்கள்: இந்தக் கற்கள் பொதுவாக பெண்களை விட, ஆண்களிடம் அதிகம் காணப்படும். கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு யூரிக் அமிலக் கற்கள் உருவாகின்றன. இந்த கற்கள் குறைவான தண்ணீர் குடிப்பவர்கள், அதிக புரதச்சத்து உள்ள உணவுகளை உண்பவர்கள், சிறுநீரில் அமிலத்தன்மை அதிகம் உள்ளவர்களிடம் உருவாகிறது. சில மரபணு காரணிகளும் யூரிக் அமில கற்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன. பியூரின் நிறைந்த உணவு இந்தக் கற்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இது மீன், மட்டி மற்றும் இறைச்சி போன்ற விலங்கு புரதங்களில் காணப்படும் நிறமற்ற பொருளாகும்.

3. ஸ்ட்ரூவைட் ஸ்டோன்: இது பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படுகிறது. இவற்றுக்கு தொற்றுக் கற்கள் என்ற பெயரும் உண்டு. பெண்களின் சிறுநீர்க் குழாய் அளவில் சிறியதாக இருப்பதால், எளிதில் அவர்களுக்கு சிறுநீரகத் தொற்று ஏற்படுகிறது. அதனால் பெண்களுக்கு இந்தக் கற்கள் உருவாகின்றன. சில சமயங்களில் இந்தக் கல் பெரியதாகி சிறுநீர் அடைப்பை உண்டாக்கும். அடிப்படையில் இந்த வகை கல் உருவாவதற்கு உணவுமுறை முக்கியப் பங்கு வகிக்காது.

இதையும் படியுங்கள்:
கோடை வெப்பம் என்னென்ன செய்யும் தெரியுமா? ஜாக்கிரதை மக்களே!
Do you know how many types of kidney stones are formed in the human body?

4. சிஸ்டைன் கல்: இவ்வகை கற்கள் அரிதாகவே உருவாகின்றன. சிஸ்டினூரியா என்ற மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வகைக் கற்கள் தோன்றுகின்றன. சிஸ்டைன் கற்கள் அமினோ அமிலத்தை உருவாக்கி சிறுநீரில் படிகங்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கும்.

சிறுநீரகக் கற்களின் அறிகுறிகள்: மனித உடலில் சிறுநீரகக் கற்கள் உருவாகியுள்ளதை சில அறிகுறிகள் மூலம் அறியலாம். வாந்தி, குமட்டல், சிறுநீர் தொற்று, சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல், காய்ச்சல் சிறுநீரில் துர்நாற்றம் வீசுவது, சிறிய அளவில் சிறுநீர் வெளியேறுதல் போன்றவை. இந்த அறிகுறிகள் காணப்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். கற்கள் சிறியதாக இருந்தால் அறுவை சிகிச்சை இன்றி, மாத்திரைகள் மூலமே கரைத்து விடலாம். லித்தோ ட்ரிப்சி என்ற திறன்மிக்க மருத்துவ முறை உள்ளது. இந்த முறையில் அதிக அழுத்தமான அதிர்ச்சி அலைகளை இயந்திரத்தின் மூலம் உருவாக்கி அவற்றின் உதவியால் சிறுநீரகக் கற்கள் உடைக்கப்படும். அவை சிறு சிறு துண்டுகளாக மாறி எளிதாக சிறுநீர் பாதையில் சென்று பின்பு சிறுநீர் வழியாக வெளியே வந்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com