ஓகா (Oxalis tuberosa) என்பது உருளைக்கிழங்கு போன்றதொரு வேர்க் கிழங்கு. இது சிவப்பு, மஞ்சள், பிங்க் என பல நிறங்களில் கிடைப்பதாகும். தென் அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் அதிகமாக உண்ணப்படும் காய் இது. இதை பச்சையாகவும் சமைத்தும் உண்ணலாம். வறுத்து, பொரித்து, சூப்களிலும் சாலட்களிலும் சேர்த்து என பல வகைகளில் உபயோகிக்கலாம். இதன் இலைகளும் தளிர்களும் கூட உண்ணக்கூடியவையே. இக்காயில் உள்ள ஐந்து ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
* ஓகாவில் வைட்டமின் C அதிகம் உள்ளது. இது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்க் கிருமிகள் உடலுக்குள் ஊடுருவாமல் பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும், இரும்புச் சத்தை உடல் உறிஞ்சவும், சருமத்தின் ஆரோக்கியம் மேம்படவும் துணை புரிகிறது.
* இதிலிருக்கும் அதிகளவு டயட்டரி ஃபைபரானது ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும், சீரான எடைப் பராமரிப்பிற்கும், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கவும் உதவி புரிகிறது.
* ஓகா ஒரு குறைந்த கலோரி அளவு கொண்ட வேர்க்காய். உட்கொள்ளும் கலோரி அளவை கருத்தில் கொண்டு டயட் மேனேஜ்மெண்ட்டை பின்பற்றுபவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாகும்.
* ஓகாவிலுள்ள இரும்புச் சத்து, பொட்டாசியம், வைட்டமின் B6 போன்ற உடலுக்குத் தேவையான கனிமச் சத்துகளும், வைட்டமின்களும் முழு உடலின் ஆரோக்கியம் காக்க உதவுகின்றன.
* ஓகாவிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடவும், உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கவும் உதவுகின்றன. இக்காயிலுள்ள ஆரோக்கிய நன்மைகளைக் கருதி உருளைக் கிழங்கைப் போல் இதையும் அடிக்கடி உட்கொண்டு நாமும் நன்மைகள் பெறுவோம்.