குளிர்ந்த நீரில் தினமும் குளிப்பதால் உண்டாகும் 7 நன்மைகள் தெரியுமா?

குளிர்ந்த நீர் குளியல்
குளிர்ந்த நீர் குளியல்
Published on

குளிர்ந்த நீரில் தினமும் குளிப்பதால் மன ஆரோக்கியம், உடல் ஆற்றல் மற்றும் தசை வலி குறைதல் போன்ற பலன்கள் கிடைக்கும். மேலும், இது மன அழுத்தத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

குளிர்ந்த நீரில் குளிப்பதால் உண்டாகும் நன்மைகள்:

1. குளிர்ந்த நீரில் குளிக்கும்போது உடலில் உள்ள என்டார்ஃபின்கள் எனப்படும் ஹார்மோன்களின் அதிகரிப்பு நடக்கும். இதனால் ஒருவர் மகிழ்ச்சியாகவும் அதிக ஆற்றலுடனும் உணர முடியும்.  ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை ஐந்து நிமிடக் குளிர்ந்த நீரில் குளிப்பது மனச்சோர்வின் அறிகுறிகளை நீக்குகிறது என்று ஆய்வு கூறுகிறது.

2. குளிர்ந்த நீர் நமது உடலை தாக்கும்போது, மேம்படுத்தப்பட்ட இரத்த ஓட்டம் உடல் முழுவதும் ஓடி, அதிக ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவுகிறது.

3. இது உடலின் தசை வலியை குறைக்கிறது. உடல் வலி இருப்பவர்கள் வெந்நீரிருக்குப் பதில் குறைந்த நீரில் குளிக்கும்போது இதனுடைய பயனை நன்றாக அனுபவிக்கலாம். குறிப்பாக, உடற்பயிற்சி செய்து முடித்த பின் வியர்வை வடிய, சில நிமிடங்கள் அமர்ந்து விட்டு,  குளிர்ந்த நீரில் குளிக்கும்போது அது உடலுக்கு மிகுந்த நன்மை பயப்பதாக இருக்கிறது. வெந்நீரில் குளிப்பதாலும் உடல் வலி குறையும். ஆனால், அது சருமத்தை எரிச்சல் ஊட்டும். சருமத்தை வறட்சியாக்கும். ஆனால். குளிர்ந்த நீரில் அந்த பிரச்னை இல்லை.

4. குளிர்ந்த நீர் உடல் முழுவதும் படும்போது அது மூளைக்கு மின் தூண்டுதல்களை அனுப்புகிறது. இது உடல் வலியை குறைப்பதோடு அல்லாமல். மனநிலையை மேம்படுத்துகிறது. மன அழுத்தத்தை நன்றாக குறைக்கிறது.

5. இது அழற்சி எதிர்ப்புப் பண்பை உருவாக்குகிறது. உடலில் உள்ள வீக்கம் நாள்பட்ட மூட்டு வலி போன்றவற்றுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி ஒரு மனிதனை ஆரோக்கியமாக வைக்கிறது.

6. நாள்பட்ட நுரையீரல் நோய்களுக்கு மற்றும் நோய் தொற்றுகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு குளிர்ந்த நேரில் குளிப்பது மிகவும் நன்மை பயக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டும் காரணியாக குளிர்ந்த நீர் உள்ளது. வளர்ச்சியை மாற்றம் என்பது நாம் உண்ணும் உணவை உடல் எப்படி ஆற்றலாக மாற்றுகிறது என்பதைக் குறிக்கும். இது உடல் கலோரிகள் மற்றும் கொழுப்பை எரிக்க உதவும் ஒரு காரணியாகும்.

7. உடலில் கொழுப்பு சத்து அதிகமாக இருப்பவர்களுக்கும் பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கும் குளிர்ந்த நீர் மிகவும் உதவியாக இருக்கிறது. கொழுப்பைக் கறைத்து, பருமனையும் குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
முருங்கை மரம், முருங்கைக்கீரை, முருங்கைக்காய் இவை கனவில் வந்தால் என்ன அர்த்தம்? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 
குளிர்ந்த நீர் குளியல்

யாரெல்லாம் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது?

ஆர்ட்டிகேரியா என்னும் சருமம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு குளிர்ந்த நீர் சரிவராது. அது அவர்கள் குளிர்ந்த நீரில் குளிக்கும்போது உடல் முழுவதும் அரிப்பு, மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.

வயதானவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு குளிர்ந்த நீர் ஒத்துக் கொள்ளாது. மேலும், இது இரத்த நாளங்களை சுருக்குகிறது. அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஏற்புடையதாக இல்லை. இதய நோய் உள்ளவர்களும் குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்க்கலாம்.

ஷவர் அடியில் நின்று குளிர்ந்த நீரில் குளிக்கலாம் அல்லது ஒரு வாளியில் தண்ணீர் பிடித்து வைத்து அது நன்றாக குளிர்ச்சி அடைந்ததும் குளிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com