வாட்டர் ஆப்பிளில் உள்ள 8 நன்மைகள் தெரியுமா?

water Apple
water Applehttps://vgrgardens.com
Published on

வாட்டர் ஆப்பிள் என்பது ஒரு சிறிய மணி வடிவத்தில் இருக்கும் ஒரு பழமாகும். இது பளபளப்பான இளம் சிவப்பு நிறத்தில், ரோஜா வாசனையுடன் இருக்கும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

நீர் ஆப்பிளில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நீர் ஆப்பிள் குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த கலோரிகளைக் கொண்ட பழமாகும், இதில் தோராயமாக 90 சதவிகிதம் தண்ணீர் உள்ளது.

1. இதில் உள்ள வைட்டமின் சி சத்து ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்டிருக்கிறது. இவை உடலில் உள்ள ஃப்ரீரேடிக்கல்களுடன் போராடி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதயத்தின் சீரான செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. பக்கவாதம் மற்றும் சரும அழற்சியின் வாய்ப்புகளையும் குறைக்கிறது.

2. இதில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்புக்கு உதவுகிறது. இதனால் குடல் சீராக செயல்பட்டு மலச்சிக்கல் பிரச்னை இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. மேலும், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் இது உதவுகிறது.

3. நீரிழிவு நோயாளிகளுக்கு இந்தப் பழம் மிகுந்த நன்மை செய்கிறது. நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

4. வெயில் காலத்தில் ஏற்படும் சன் ஸ்ட்ரோக்கிற்கு வாட்டர் ஆப்பிள் அருமருந்தாகத் திகழ்கிறது. இதில் 90 சதவிகித தண்ணீர் உள்ளது. எனவே, வெப்பமான காலகட்டங்களில் தாகத்தை தணிக்க உதவுகிறது.

5. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரல் நோய்களை சமாளிக்க உதவுகிறது. இதன் நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாடு தொற்று நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, நோயைத் தடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துமாவு தயாரிப்பது எப்படி தெரியுமா?
water Apple

6. இந்தப் பழத்தில் உள்ள வைட்டமின் சி இரத்தத்தில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. அதனால் தசைகளைப் பாதுகாப்பதோடு, தசைப்பிடிப்புகளையும் குறைக்கிறது.

7. இதில் உள்ள வைட்டமின் பி3 தீங்கு விளைவிக்கும் கொழுப்பு மூலக்கூறுகளை குறைக்கிறது. அதனால் உடலின் நல்ல கொழுப்பின் உற்பத்தி அதிகரிக்கும். அதனால் இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவகிறது.

8. இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற ஆண்டி ஆக்சிடென்ட்கள் உள்ளதால் இது சருமத்தின் வறட்சியைக் குறைத்து இளமையான தோற்றத்தை அளிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com