வெள்ளைத் தேநீரின் வியக்க வைக்கும் நன்மைகள் தெரியுமா?

வெள்ளைத் தேநீர்
வெள்ளைத் தேநீர் twinings.co.uk

ற்போது மக்கள் சாதாரண தேநீரை விட கிரீன் டீயை அதிகம் விரும்பி பருகுகிறார்கள். ஆனால் கிரீன் டீயை விட அதிக அளவு நன்மைகளைத் தரும் வெள்ளைத் தேநீரின் (ஒயிட் டீ) நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

வெள்ளைத் தேநீர் என்றால் என்ன?

தேயிலைச் செடியின் இலைகள் முழுமையாக வளர்வதற்கு முன்பே இளம் குருத்துக்களாக இருக்கும் பருவத்திலேயே அறுவடை செய்யப்படுகிறது. மொட்டுகள் மெல்லிய வெள்ளை மூடிகளால் மூடப்பட்டிருக்கும். இந்த இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பானம்தான் வெள்ளைத் தேநீர் என்று அழைக்கப்படுகிறது. சீனாவில் உள்ள பூஜ்யான் மாகாணம். இந்தியாவின் டார்ஜிலிங் மற்றும் இலங்கையின் சில பகுதிகளில் இருந்து இந்த வகைத் தேயிலைகள் விற்பனைக்கு வருகின்றன.

இதன் சிறப்பம்சம்;

வெள்ளை தேயிலை இலைகள் கையால் பதப்படுத்தப் படுகின்றன. இதில் காபின் அளவு குறைவாக இருக்கிறது. எனவே உடல், மன ஆரோக்கியத்திற்கு ஏற்றது. வெள்ளைத் தேநீர் அதனுடைய அழகான நறுமணம் மற்றும் அசத்தல் சுவைக்காக மட்டுமல்லாமல் அதன் ஆரோக்கிய நன்மைக்காகவும் மிகவும் விரும்பப்படுகிறது.

வெள்ளை தேயிலை இலைகள்...
வெள்ளை தேயிலை இலைகள்...

ஆரோக்கிய நன்மைகள்;

தில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் குணம் கொண்டது. இதில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் மிகுந்த நன்மை பயக்கும்.

இது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. பதட்டத்தைக் குறைத்து மனதை அமைதி நிலையில் வைக்கிறது. மனதை உற்சாகமாக வைக்கிறது.

இரத்த அழுத்தத்தையும் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. இதில் உள்ள மினரல்கள் தொப்பையை குறைக்கிறது. உடல் எடையை கட்டுப்பாடாக வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
இஞ்சி குளிர்காலத்தில் ஆரோக்கியத்திற்கு வரமா? சாபமா?
வெள்ளைத் தேநீர்

அழகையும் அதிகரிக்கும்;

தினமும் இரண்டு முறை ஒயிட் டீ குடிப்பதால் சருமம் பளபளப்பாக ஆகிறது. மேலும் பற்கள் ஈறுகளை ஆரோக்கியமாக வைக்கிறது. இளமை தோற்றத்தை தருகிறது.

இது தலைமுடியையும்  ஆரோக்கியமாக வைக்கிறது. பளபளக்கும் கூந்தலுக்கு தருகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது முடி உதிர்தலை தடுக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com