கிரான்பெர்ரி பழத்தின் பூர்வீகம் வட அமெரிக்காவாகும். இந்த பழத்தில் அதிக ஊட்டச்சத்தும், ஆன்டி ஆக்ஸிடென்டும் உள்ளதால் இது சூப்பர் புட்டாக கருதப்படுகிறது. புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்களை சரிசெய்ய உதவுவதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது. மேலும், சிறுநீர் பிரச்னைக்கு அருமருந்தாக இது உள்ளது.
1. கிரான்பெர்ரி பழத்தில் Proanthocyanidins என்னும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது E.coli பாக்டீரியாவை செல்லில் ஒட்டிக்கொள்ளாமல் தடுப்பதால் கிட்னி சம்பந்தமான நோய்தொற்று வராமல் தடுக்க உதவுகிறது.
2. கிரான்பெர்ரி ஜூஸ் குடிப்பதால் வயிற்றில் உள்ள அல்சர் மற்றும் புற்றுநோயை சரி செய்ய உதவுகிறது. H.Pylori என்னும் பாக்டீரியா வயிற்று புற்றுநோய்க்கு காரணமாக இருக்கிறது. கிரான்பெர்ரி ஜூஸை தினமும் இரண்டு முறை குடிக்கும்போது அதிலிருக்கும் அதிகமான ஆன்டி ஆக்ஸிடென்ட் H.Pylori பாக்டீரியாவை அழிக்க உதவுகிறது. மேலும் செரிமானத்திற்கு அதிகமாக உதவுகிறது.
3. கிரான்பெர்ரி ஜூஸ் குடிப்பதால் முடக்குவாதத்தால் ஏற்படும் வீக்கம், வலி ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது.
4. கிரான்பெர்ரி ஜூஸ் இதய சம்பந்தமான பிரச்னைகளை குறைக்க உதவுகிறது. இதில் Polyphenols இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.
5. கிரான்பெர்ரி ஜூஸ் பாக்டீரியா மற்றும் வைரஸால் உணவின் மூலம் ஏற்படும் நோய்தொற்றை போக்க உதவுகிறது.
6. பெண்களுக்கு மெனோபாஸிற்கு பிறகு இதய நோய் பிரச்னை வர அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இதை சரி செய்ய கிரான்பெர்ரி ஜூஸை தினமும் எடுத்துக்கொண்டால், இரத்தத்தில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது.
7. கிரான்பெர்ரி ஜூஸை தினமும் குடிப்பதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் Vaginal பிரச்னைகளை போக்கும். கிரான்பெர்ரியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்டில் Anti inflammatory effect உள்ளதால் மாதவிடாய் பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது.
8. கிரான்பெர்ரி ஜூஸில் அதிகமாக வைட்டமின் சி மற்றும் சாலிசில்லிக் ஆசிட் இருப்பதால் சருமப் பிரச்னையை சரி செய்ய உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் சருமத்தில் உள்ள Blemish ஐ சரிசெய்கிறது. இத்தகைய நன்மைகளை கொண்ட கிரான்பெர்ரி ஜூஸை தினமும் குடித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.