பாலில் எதைக் கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

Do you know the benefits of drinking honey mixed with milk?
Do you know the benefits of drinking honey mixed with milk?http://tamil.todaysays.com

பெண்கள் பாலுடன் சோம்பு கலந்து குடிப்பது மாதவிடாயை  சீராக்கும். பள்ளி மாணவ, மாணவியருக்கு நினைவாற்றலை அதிகரிக்கும். பாலில் சோம்பு கலந்து அடிக்கடி குடித்து வந்தால் செரிமானம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்னைகளும் நீங்கி விடும்.

பாலில் மஞ்சள் சேர்த்து குடிப்பது, தொண்டைப் புண், இருமல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. முதுகு வலிக்கு மஞ்சள் பால் சிறந்த தீர்வாகும். இது முதுகெலும்பு மற்றும் மூட்டுகளை வலுப்படுத்தவும் உதவும்.

பாலில் மிளகு தூள் கலந்து குடித்தால், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். மஞ்சள், மிளகு சேர்த்த பால் குடித்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பூண்டு கலந்த பால் குடிப்பது இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, இரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது. இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு மற்றும் கால் வலி போன்ற பிரச்னை உள்ளவர்கள், பூண்டை பாலில் காய்ச்சி குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.

தினமும் இரவில் தூங்கப் போகும் முன்பு, பாலில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து பருகினால், நிம்மதியான உறக்கம் பெறலாம். இது நமது நரம்புகளை அமைதியாக்குவதோடு மட்டுமல்லாமல், உறங்க வைப்பதற்கு ஏதுவான அமிலங்கள் சுரப்பதற்கும் உதவுகிறது. மேலும் இது, நமது மூளையின் செயல்பாட்டினை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், மன அழுத்தம் மற்றும் கோபத்தினை குறைக்கவல்லதாகும்.

பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து இரவில் பருகினால், இதய ஆரோக்கியம் மேம்படும். எலும்புகள் வலுப்பெறும். இரவு நேர இருமல் கட்டுப்படும்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் 50 பிளஸா? இனிமையான செகண்ட் இன்னிங்ஸ் உங்களுக்குத்தான்!
Do you know the benefits of drinking honey mixed with milk?

செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் குணமாகும், இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும். சிலருக்கு உடல் சூடு காரணமாக உண்டாகும் வாய்புண், வயிற்றுப்புண்ஆகியவை குணமாக, செம்பருத்திப் பால் அருமருந்து.

பாலில் கசகசாவை சேர்த்து குடிப்பது குடலுக்கு நல்லது. இரவில் பல முறை எழுந்திருக்கும் அசௌகரியம் குறைகிறது. மன அழுத்த அளவைக் குறைக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com