அரிசி பொரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

Do you know the benefits of eating Puffed rice?
Do you know the benefits of eating Puffed rice?https://www.herzindagi.com

ங்கிலத்தில், ‘பஃப்டு ரைஸ்’ என அழைக்கப்படும் அரிசி பொரி பொதுவாக அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு பொருள். மிக எளிமையான உணவு மற்றும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடியது, ஆனால், சத்துக்கள் நிறைந்தது. அதனுடைய நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. அரிசி பொரியில் கலோரிகள் குறைவாக இருக்கின்றன. எனவே, குறைந்த கலோரி உள்ள உணவை எடுத்துக்கொள்ள விரும்புவோருக்கு இது மிகப் பொருத்தமான உணவாகும்.

2. குளூட்டன் (பசையம்) அலர்ஜி உள்ளவர்களுக்கு ஏற்றது. சிலருக்கு க்ளூட்டன் எனப்படும் பசையம் உள்ள உணவுகள் உடலுக்கு தொந்தரவு தரும். பசையம் உணர்திறன் அல்லது செலியாக் நோய் உள்ளவர்களுக்கு அரிசி பொரி மிகவும் ஏற்றது.

3. அரிசி பொரியில் கொழுப்புச்சத்து மிக மிகக் குறைவு. எனவே, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு. இதய ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவு.

4. பஃப்டு ரைஸ் ஒரு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவாகும், இது விரைவான ஆற்றலை வழங்குகிறது. ஆற்றல் அதிகரிப்பு தேவைப்படுபவர்களுக்கு இது ஒரு வசதியான சிற்றுண்டியாக இருக்கும்.

5. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே, செரிமானத்திற்கு உகந்தது. முழு தானிய உணவை விரும்புபவர்களுக்கு ஏற்றது.

6. அரிசி பொரியில் இயற்கையாகவே சோடியம் குறைவாக உள்ளது. பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களில் சோடியம் அதிகமாக இருக்கும். குறைவான சோடியம் எடுத்துக்கொள்ள வேண்டிய நபர்களுக்கு அரிசி பொரி ஒரு சிறந்த உணவுத் தேர்வாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
உறவுகளைப் பேணுவதிலேயே உள்ளது மகிழ்ச்சி!
Do you know the benefits of eating Puffed rice?

7. குழந்தைகளுக்கு ஏற்றது. பஃப்டு ரைஸ் அதன் லேசான மற்றும் மொறுமொறுப்பான தன்மையின் காரணமாக பெரும்பாலும் குழந்தைகளால் விரும்பப்படுகிறது. பழங்கள் அல்லது பிற சத்துள்ள பொருட்களுடன் இது பரிமாறப்படும்போது சர்க்கரை தின்பண்டங்களுக்கு ஆரோக்கியமான மாற்றாக இருக்கும்.

எளிதாகக் கிடைக்கும் இந்த அரிசி பொரியை பெரிய பெரிய மால்களில் வாங்கும்போது வணிக ரீதியாக அவற்றில் சில வகையான சர்க்கரைப் பொருட்கள் சேர்க்கப்படலாம். எனவே, கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும். இதை காலை உணவு தானியங்களில் சேர்க்கலாம் அல்லது சிற்றுண்டிகளில் சேர்க்கலாம். அரிசி கேக்குகள் போன்ற சமையல் வகைகளில் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com