குல்ஃபா கீரையிலிருக்கும் குளு குளு நன்மைகள் தெரியுமா?

Gulfa spinach
Gulfa spinachhttps://tamil.webdunia.com

கீரைகளில் அநேக ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. தினம் ஒரு கீரையை உணவுடன் சேர்த்து உட்கொண்டால் உடல் நன்கு வலுப்பெறும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மார்க்கெட்களிலும் அநேக வகையான கீரைகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஊட்டச் சத்துக்களோடு உடலுக்கு குளிர்ச்சியும் தரக்கூடிய கீரைதான் இந்த 'குல்ஃபா’ கீரை! இந்தக் கீரையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

கோடைக் காலங்களில் அநேக ஊட்டச் சத்துக்களை வழங்க வல்லது குல்ஃபா கீரை. அதிகளவு வைட்டமின்கள் A, C, E மற்றும் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற கனிமச் சத்துக்களும் இக்கீரையில் நிறைந்துள்ளன. மேலும், இதயத்துக்கு நல்ல பலம் தரவும், எடைக் குறைப்பிற்கும் உதவக் கூடியதுமான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் குல்ஃபா கீரையில் உள்ளன.

வெப்பம் அதிகமுள்ள கோடைக் காலங்களில் உடலிலிருந்து வியர்வை மூலம் வெளியேறும் நீர்ச்சத்தை உடனுக்குடன் இட்டு நிரப்பக்கூடிய திறனுடையது குல்ஃபா கீரை. இதனால் டீஹைட்ரேஷன் தடுக்கப்பட்டு உடல் நீரேற்றத்துடன் இருப்பதற்கு உதவுகிறது.

இதன் குளிர்ச்சி தரும் குணமானது பாரம்பரிய மருத்துவத் தயாரிப்புகளில் மிகப் பிரசித்தி பெற்றது. இதைக்கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளால், வெப்ப அலைகளின் தாக்கத்தால் உண்டாகும் வியர்குரு, வேனல் கட்டிகள் போன்று சருமத்தில் உண்டாகும் கோளாறுகளுக்கு நிவாரணம் பெற முடியும்.

இதையும் படியுங்கள்:
பிறர் உங்களை மதிக்க இந்த 9 பழக்கங்களுக்கு குட் பை சொல்லுங்கள்!
Gulfa spinach

குல்ஃபா கீரையின் இலைகளை அப்படியே பச்சையாக சாலட்களில் சேர்த்து உண்ணலாம். ஸ்டிர் ஃபிரை, சூப், கூட்டு போன்றவற்றில் சேர்த்து சமைத்தும் உண்ணலாம். அப்போது அந்த உணவுகளுக்கு லேசான புளிப்பு சேர்ந்த புதிய சுவை கிடைக்கும்.

இந்தக் கீரையை தமிழில் பருப்புக் கீரை என அழைக்கிறோம். வீடுகளில் தொட்டியில் வைத்து வளர்க்க ஏற்றது. பருப்புக் கீரை கூட்டு கண் ஆரோக்கியம் காக்கவும், இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். நாமும் இதை அடிக்கடி உட்கொள்வோம்; உடல் ஆரோக்கியம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com