பருத்திப் பாலில் உள்ள நன்மைகள் தெரியுமா?

Do you know the benefits of Paruthi milk?
Do you know the benefits of Paruthi milk?https://tamil.krishijagran.com
Published on

துரை என்றாலே சாப்பிடும் பொருட்களில் முதலில் நினைவுக்கு வருவது ஜிகர்தண்டா. அடுத்து நினைவுக்கு வருபவை பருத்திப்பால், மல்லிப்பூ இட்லி ஆகியவையும் பிரபலமாகும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் பருத்தி பாலில் உள்ள நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பருத்தி விதையிலிருந்து பால் எடுத்து அதில் சுக்கு, மிளகு, ஏலக்காய், சித்தரத்தை, தேங்காய் பால், வெல்லம் அல்லது கருப்பட்டி போன்ற பொருட்கள் சேர்த்து செய்யப்படுவதுதான் பருத்திப்பால். இதில் நிறைய வைட்டமின்கள், புரதங்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், கொழுப்பு அமிலங்கள், கனிம சத்துக்கள் அதிகமாக உள்ளன. மேலும், பருத்தி விதையில் நார் சத்துக்கள் அதிகம்.

இதனை காலையில் காபி, டீக்கு பதில் பருகி வர நமக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதுடன் மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு ஆகிய பிரச்னைகளையும் சரி செய்கிறது. இதனை நீரிழிவு நோயாளிகளும் தாராளமாகக் குடிக்கலாம். பருத்திப் பாலை காலை வெறும் வயிற்றில் குடித்து வர அல்சர், வயிற்றுப்புண், குடல் புண் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளும் குணமாகும்.

உணவு முறை மற்றும் மாறி வரும் பழக்க வழக்கங்களால் மாதவிடாய் சிலருக்கு சரியாக வருவதில்லை. அப்படிப்பட்டவர்கள் வாரம் ஒரு முறை இந்த பருத்திப் பாலை குடிப்பதன் மூலம் மாதவிடாய் சரியான நேரத்தில் வெளிவரும். அது மட்டுமின்றி, பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மை பருத்தி விதைகளுக்கு உண்டு. எனவே, கர்ப்ப காலத்திலும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களும் இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
தாத்தா, பாட்டி எனும் சொற்களைக் கேட்டு அலறும் முதியவர்கள்!
Do you know the benefits of Paruthi milk?

பருத்தி விதையுடன் கருப்பட்டியும் பச்சரிசியும் சேர்க்கப்படுவதால் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் மாவுச்சத்தும் இருப்பதால் எலும்புகளையும் உடலையும் வலுவாக வைத்துக்கொள்ள உதவும். தாவரங்களின் விதைகளில் இருந்து  பெறப்படும் பால், தேங்காய் பால், பாதாம் பால், பருத்தி பால் ஆகியவை. இவை அனைத்துமே நம் உடலுக்கு வலிமையை தரக்கூடியவை.

சிலருக்கு பசும்பால் குடித்தால் அலர்ஜி ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தாராளமாக பருத்தி பாலை அருந்தலாம். இது இரத்த அழுத்தத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். வாரத்திற்கு ஒருமுறையேனும் இதுபோன்ற ஆரோக்கியமான பானங்களைப் பருகுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com