1. சரியான தூக்கமின்மை: சரியாகத் தூக்கம் இல்லாதவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதை ஆய்வுகளின் வழி அறிந்திருக்கின்றனர். தினசரி 7 முதல் 8 மணி நேர உறக்கம் அவசியமாகும். நாம் உறங்கும் நேரத்தில் நம் சிறுநீரகங்கள் தன்னை சரிப்படுத்திக்கொள்ளும் வேலையைச் செய்கின்றன.
2. போதிய நீர் அருந்தாமை: போதிய நீர் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நீர் நம் உடல் அழுக்கை மட்டுமல்ல, சிறுநீரகத்தில் தேங்கும் கழிவுகள் சிறுநீர் வழியாக வெளியேறுவதற்குக் காரணமாக இருப்பது நாம் அருந்தும் நீர்தான். உடலுக்குத் தேவையான நீரினை அருந்துவதோடு, சிறுநீரகம் இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கும் கழிவுகளை வெளியேற்றவும் தேவையான நீரினை அருந்த வேண்டும். நிறைய நீர் அருந்தினால்தான் நம் சிறுநீரகம் பாதுகாப்பாக இருக்கும்.
3. அதிகப்படியான இனிப்பு கலந்த நீர் அருந்துவது: உதாரணமாக டின்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களை முற்றிலும் தவிர்ப்பது அவசியம். ஃப்ரெஷ் பழச்சாறுகள், இளநீர், மோர் போன்றவற்றை அருந்தப் பழகிக்கொள்வது நல்லது. சீனியில் கலக்கப்படும் இரசாயனங்கள் சிறுநீரகத்தை பாதிக்கச் செய்கிறது. வெல்லம், நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி போன்ற இரசாயனம் கலக்காத இனிப்பினைப் பயன்படுத்துங்கள்.
4. அதிக மது அருந்துதல்: மதுப்பழக்கம் சிறுநீரக பாதிப்புக்கு முக்கியமான காரணமாகும். அதிகப்படியான மது அருந்துவதால் மதுவிலிருந்து நச்சுப்பொருளை பிரித்தெடுக்கும் வேலைக்கு சிறுநீரகம் முக்கியத்துவம் கொடுப்பதால், உடலின் தினசரி தேங்கும் கழிவினை பிரித்தெடுப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது. கழிவுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தேங்கி, சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது.
5. அதிகப்படியான உப்பு கலந்த உணவு: உணவில் உப்பினை குறைத்துச் சாப்பிட வேண்டும். பதப்படுத்த உணவுகளில் உப்பு அதிகம் உள்ளது. முடிந்தவரை இவற்றைத் தவிர்ப்பது நல்லது. அதிகப்படியான உப்பு சிறுநீரகத்தின் செயல்திறனை மட்டுப்படுத்துகிறது. நீரை வெளியேற்றும் ஆற்றல் நாளடைவில் குறைகிறது. இது உயர் இரத்த அழுத்தத்திற்குக் காரணமாகிறது.
6. அதிகப்படியான சத்து மாத்திரைகள், டானிக்குகள்: உடலுக்கு சத்தினைத் தரும் வைட்டமின், டானிக் போன்ற பொருட்களை அதிகப்படியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சிலரின் உடல்வாகு இவற்றை எதிர்கொள்ளாமல் பக்கவிளைவினை ஏற்படுத்தும். அது சிறுநீரகங்களைப் பாதிக்கும். சிறுநீரகத்தில் கல் சேரவும் காரணமாகும். எனவே, மருத்துவரின் ஆலோசனையின்பேரில் இதுபோன்ற டானிக்குகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிறுநீரகத்தை வலுப்படுத்தும் எளிய வழிமுறைகள்:
காது மடல்களை தேய்த்து (மஸாஜ்) விடுங்கள்: உங்கள் பெருவிரலால் உங்கள் காதுகளை மெதுவாக அழுத்திவிடுங்கள். நுனி காதுகளை இரண்டு விரல்களால் கசக்கி விடுங்கள். தினசரி சில முறைகள் இப்படிச் செய்து வாருங்கள்.
அடிக்கடி தலை வாருங்கள்: சற்று அகன்ற இடைவெளியுள்ள சீப்புகளால் அடிக்கடி தலை வாருங்கள். குறிப்பாக. தலையின் பின் பக்கத்தில் சீவ வேண்டும். லேசாக தலை சூடேறுவதை உணர்ந்ததும் நிறுத்தி விடுங்கள்.
பின் பக்கத்தை தேய்த்து விடுங்கள்: தினசரி ஒரு ஐந்து நிமிடம் பின் பக்கத்தை (பிருஷ்டத்திற்கு சற்று மேல் பகுதி இடுப்பின் கீழ்பகுதி) தேய்த்து விடுங்கள். இது சிறுநீரகங்களைச் சூடேற்றும். இதை நின்றவாறு செய்ய வேண்டும்.
குதிகாலை உயர்த்துங்கள்: நின்றபடி முன்பாதங்களை தரையில் அழுத்தியவாறு குதிகலை உயர்த்த வேண்டும். தோள்கள் நிமிர்ந்தவாறு இருக்க வேண்டும். பற்களை லேசாகக் கடித்துக் கொள்ளலாம். இதைத் தொடர்ந்து சில முறைச் செய்யலாம்.
நடைப்பயிற்சி: சிறுநீரகப் பாதுகாப்பிற்கு நடைப்பயிற்சி முக்கியமாகும். தினசரி அரைமணி நேரத்திற்கு மேலாக அவசியம். நடப்பது இந்தப் பயிற்சி சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.