மூக்கு மற்றும் காதுகளில் ரோம வளர்ச்சிக்கான காரணம் தெரியுமா?

காதுகளில் ரோம வளர்ச்சி
காதுகளில் ரோம வளர்ச்சி
Published on

ம் உடலுக்குள் இயங்கும் பலவித இயக்கங்களில் நோயெதிர்ப்பு மண்டலமும் ஒன்று. இவை நம் உடலில் உண்டாகும் நோய்களை விரைவில் குணமாக்கவும், வெளியிலிருந்து தொற்று நோய்க் கிருமிகள் உடலுக்குள் புக முயலும்போது அவற்றை எதிர்த்துப் போராடி ஜெயிக்க உதவும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவுகளை உட்கொள்வதும் நம்மை நோயின்றி வாழ வைக்கும். இப்படி, நம் உடலின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தும் இந்த நோயெதிர்ப்பு மண்டலத்தின் பணிகளில் ஒன்றே, நம் மூக்கு மற்றும் காதுகளில் ரோமத்தை வளரச் செய்வதும்.

அதற்கான வயது வரும்போது ஆண், பெண் இருபாலருக்கும் இந்த ரோம வளர்ச்சி ஆரம்பித்து தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும். அதற்கான முக்கியக் காரணங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

மாசடைந்த சுற்றுச் சூழலில் வசிக்கும், நமது உடலிலுள்ள நாசி மற்றும் காது துவாரங்களின் வழியாக தூசுகளும் அழுக்குகளும் சுலபமாக உட்சென்று செவிப்பறை மற்றும் சுவாசப் பாதையில் ஆரோக்கியக் குறைபாடுகளை உண்டுபண்ணக்கூடும். இதன் காரணமாக இயற்கையாகவே நோயெதிர்ப்பு மண்டலம் விரித்துள்ள பாதுகாப்பு வளையத்தின் ஒரு பகுதியே இந்த உரோம வளர்ச்சி.

இந்த முடிகள் வெளியிலிருக்கும் நுண்ணிய நோய்க் கிருமிகள், பூஞ்சைகள், நுண் பொருட்கள் மற்றும் பாக்டீரியா வித்திகள் (Bacteria Spores) போன்றவற்றை  காற்றிலிருந்து வடிகட்டி நுரையீரலுக்குள் செல்வதைத்  தடுக்க உதவுகின்றன. சில நேரங்களில் ஒவ்வாமை காரணமாக மூக்கில் வீக்கம் ஏற்பட்டாலும் இந்த முடிகள் அவற்றை குணப்படுத்தி ஆஸ்துமா வரும் ஆபத்தைத் தடுக்கவும் செய்யும். மேலும், மூக்கினுள்ளிருக்கும் முடிகள் உள்ளிழுக்கும் காற்றின் வெப்ப அளவை உடலின் வெப்ப அளவுக்கு சமமாக மாற்றக் கூடியதாகவும் செயல்படும்.

நம் உடலுக்கு வயது ஏற ஏற இந்த முடிகளின் அடிப்பகுதிக் கால்களைச் சுற்றியிருக்கும் ஃபோலிகிள்ஸ் (Folicles) எனப்படும் நுண்ணறைகள் ஹார்மோன் சென்சிடிவிட்டிக்கு (Anagen Sensitivity) உள்ளாகும். அப்போது இந்த முடிகளின் நீளமும் அடர்த்தியும் அதிகரித்துக்கொண்டே போகும். இவை வெளிப்பார்வைக்கு விகாரமான தோற்றம் தருவதால் பலர் இதை நீக்க முயற்சித்து பிடுங்க நினைப்பர். அப்படி இந்த முடியைப் பிடுங்குவது தவறு. ஏனெனில், அதன் கால்களைச் சுற்றி சேர்ந்திருக்கும் நோய்க் கிருமிகள் சுலபமாக உட்செல்ல வழி கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
மஞ்சள் கிழங்கின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?
காதுகளில் ரோம வளர்ச்சி

சிலர் அதன் வளர்ச்சியை முற்றிலுமாகத் தடுக்க நினைத்து லேசர் ஹேர் ரிமூவல் மற்றும் வாக்ஸிங் (waxing) முறையைப் பின்பற்ற நினைப்பர். இவை அனைத்துமே தவறான விளைவுகளையே தரும். இவை மூக்கின் அடிப்பகுதி சருமத்தை (Mucus Membrane) சேதப்படுத்தி அதன் வேலையை சரிவர செய்ய முடியாமல் போகச் செய்யும். எனவே, இவ்வாறு அதிக நீளமாக வளரும் முடிகளை அவ்வப்போது ட்ரிம் பண்ணி விடுவதே உசிதம். இந்த விதமாக வளரும் முடிகள் கண்களின் புருவத்தைச் சுற்றியும் காணப்படுவது சகஜம். பெண்களுக்கும் இதுபோன்ற முடி வளர்ச்சி தோன்றும் என்றாலும், ஆண்களுக்கே இது அதிக அளவில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று காது மற்றும் மூக்குத் துவாரங்களில் வளரும் முடிகளைப் பற்றி பெரிதாகக் கவலை கொள்ளாமல் அவற்றிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை மட்டுமே கருத்தில் கொண்டு அவ்வப்போது அவற்றை ட்ரிம் செய்து நன்மைகள் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com