குளிர்பானங்களின் கொடூர குணங்கள் தெரியுமா?

வித விதமான குளிர்பானங்கள்
வித விதமான குளிர்பானங்கள்
Published on

ம்மில் பல பேர் உணவை கட்டுப்பாடு இன்றி உண்டுவிட்டு அது செரிமானம் ஆவதற்கு கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களை அருந்துவதை வழக்கமாக வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், உடலுக்கு தீங்கு தரும் இந்த குளிர்பானங்களின் தாக்கங்கள் குறித்து எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா?

இதுபோன்ற பானங்கள் கடின உணவுகளை எளிதில் செரிக்க வைத்து செரிமானமின்மையால் ஏற்படும் களைப்பைப் போக்கி, தற்காலிக நிவாரணம் தருவதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் திருவண்ணாமலையில் குளிர் பானம் அருந்திய சிறுமி மரணம் அடைந்த செய்தியை பலரும் கேள்விப்பட்டிருப்போம்.

செயற்கை குளிர்பானங்கள் அருந்துவதால் உடலின் அமிலத்தன்மை அதிகரிக்கும். குளிர்பானங்களின் PH அளவு என்பது சுமாராக 2.8 என்ற அளவில்தான் இருக்கும். அப்பொழுதுதான் அந்த குளிர்பானத்தில் நுண்ணுயிரிகள் எதுவும் வாழ முடியாமல், அந்த குளிர்பானம் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். PH அளவு குறைவாக உள்ளது என்பது முழுக்க முழுக்க அமிலத்தன்மை உடையதைக் குறிக்கும் என்கிறது ஆய்வுகள். இதனால் வரும் பின்விளைவுகள் அதிகம்.

குளிர்பானங்களை அருந்தினால் செரிமானக் கோளாறுகள், வயிற்றுப்புண் உள்ளிட்ட பல வகையான பாதிப்புகள் நேரிடும். ஆசனக்கடுப்பு, ஆரம்பநிலை மூலம் ஆகிய பாதிப்புகள் இதனால் அதிகமாகும் வாய்ப்புண்டு. இதிலுள்ள வேதிப்பொருட்கள் எலும்பு, பற்கள் போன்றவற்றை எளிதாக பாதிக்கும். நாவின் இயல்பான சுவை மொட்டுகள் பாதிக்கப்பட்டு சுவையுணர்திறன் குறைகிறது. அது மட்டுமின்றி, இதன் அமிலத்தன்மை சிறுநீரகத்தை பாதிக்கும் வாய்ப்புள்ளது.

குளிர்பானங்களை அடிக்கடி பருகினால் பசியுணர்வை இழந்து செயற்கையான பசியுணர்வு தூண்டப்படும். இதனால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு பாதிப்புக்கும் வழிவகுக்கும். மாறாக, சிலருக்கு பசி மந்தத்தன்மை ஏற்படுவதும் உண்டு. குறிப்பாக, அடிக்கடி வெறும் வயிற்றில் குளிர்பானங்களை பருகினால் குடற்புண் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
‘மீ டைம்’ ஒருவருக்கு ஏன் மிகவும் அவசியம் தெரியுமா?
வித விதமான குளிர்பானங்கள்

குளிர்பானத்தில் சேர்க்கப்படும் செயற்கை சுவையூட்டிகள் பலரையும் இதற்கு அடிமையாக்கி விடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. செயற்கையான தாகம், செயற்கையான சிறுநீர் அளவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளையும் இது உருவாக்குகிறது.

சைவம் மற்றும் அசைவ உணவுகளுடன் குளிர்பானங்களை எடுக்கும்போது, மேற்கண்ட விளைவுகளுடன், உண்ட உணவின் சத்துக்களும் வீணாகிறது. ஒரு நாள்தானே என நினைத்து குளிர்பானங்களை அருந்த ஆரம்பித்தால், பிறகு இது இல்லாமல் உணவு இல்லை எனும் நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இனி, கடைகளில் விற்கப்படும் பாட்டிலில் அடைக்கப்பட்ட ரசாயன பழச்சாறுகள், குளிர்பானங்கள், மில்க் ஷேக் ஆகியவற்றை தவிர்த்து, உடலுக்கு ஆரோக்கியம் தரும் இயற்கையான பழ சாறுகள், இளநீர், கரும்பு சாறு போன்றவற்றை பருகி உடல் ஆரோக்கியம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com