நியூஸ் பேப்பரில் வைத்து வடை, பஜ்ஜி சாப்பிடுவதில் உள்ள ஆபத்து தெரியுமா?

Vada, bajji in news paper
Vada, bajji in news paper
Published on

டீக்கடைக்கு செல்லும் பெரும்பாலானோர் செய்யும் முதல் தவறு அங்கே தட்டில் வைத்திருக்கும் வடை, போண்டா, பஜ்ஜி போன்றவற்றை அருகில் கம்பியில் மாட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் துண்டு காகிதத்தில் வைத்து ஒரு அழுத்து அழுத்தி விட்டு சாப்பிடுவதுதான். அந்த போண்டா, வடை, பஜ்ஜியில் உள்ள எண்ணெய்யை அந்த நியூஸ் பேப்பர் உறிஞ்சிவிடுவதாக நமக்கு நாமே நம்பிக்கைக் கொள்கிறோம். உங்கள் நம்பிக்கை படி அந்த பலகாரத்தில் உள்ள எண்ணெய் சிறிது போய்விடும்தான். ஆனால், இதனால் உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் வரும் என்று உங்களுக்குத் தெரியுமா? அது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

செய்தித்தாள்கள் செய்தி படிப்பதற்கு என்ற நிலையைக் கடந்து பல்வேறு பயன்பாடுகளுக்கும் உபயோகமாகிறது என்பது மகிழ்ச்சியான விஷயமே! ஆனால், அதிலும் சிலவகை பயன்பாடுகளில் ஆபத்து இருக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அதில் ஒன்றுதான் செய்தித்தாளில் கை துடைப்பது. சிறிய ஓட்டல்கள், தெருவோர உணவகங்களில் சாப்பிட்டு கைகழுவிய பிறகு, ஈரமான கைகளை துடைப்பதற்கு பழைய செய்தித்தாள்களை கத்தரித்து வைத்திருப்பார்கள். அவற்றில் நம் கையை துடைக்கும்போது, நமது உடலுக்குள் காரீயம் எனும் நச்சு குடலுக்குள் சென்று விடுகிறது. செய்தித்தாளின் அச்சு மையில் காரீயம் உள்ளது.

அது உலர்வாக இருக்கும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. தண்ணீர் பட்டால், பிரச்னைதான். இது கூட பரவாயில்லை. வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களில் உள்ள எண்ணெயை உறிஞ்ச செய்தித்தாள்களை பயன்படுத்துவது மிகப் பெரிய ஆபத்து. இதனால் காரீயம் நேரடியாக உணவுக் குழாய்க்குள் சென்று விடும். காரீயம் உடலுக்குள் சென்றால் அது சிறுநீரகம், கல்லீரல், எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி என்று எல்லாவற்றையும் பாதிக்கும்.

இதையும் படியுங்கள்:
இரவில் நன்றாக தூங்க இந்த 6 செடிகளை வீட்டில் வையுங்கள்!
Vada, bajji in news paper

இப்படி கெடுதல் விளைவிக்கும் சில பொருட்கள் உடலுக்குள் சென்றால், காலப்போக்கில் அது கழிவாக வெளியே வந்துவிடும். ஆனால் காரீயத்தின் கதை வேறு. அது கழிவாக வெளியே செல்வதில்லை. தொடர்ந்து காரீயம் உள்ளே போகப் போக சேர்ந்து கொண்டே போகும். கெடுதல்கள் கூடிக்கொண்டே போகும். நிறைய பேர் காரீயம் என்றால் அது ஈயம், அலுமினியம் என்று நினைக்கிறார்கள். அது தவறு. காரீயம் வேறு. ஈயமும் அலுமினியமும் நமக்கு கெடுதல் தராத உலோகங்கள்.

எவர்சில்வர் பாத்திரங்கள் வருவதற்கு முன்பு நமது சமையல் அறைகளை ஆட்சி செய்தவை, ஈயம் பூசப்பட்ட பித்தளைப் பாத்திரங்களும், அலுமினியப் பாத்திரங்களும்தான். அதனால் அவற்றால் கெடுதல் இல்லை. காரீயம்தான் கெடுதல். முன்பெல்லாம் பெட்ரோலில் கூட காரீயம் இருந்தது. அது வாகனப்புகை மூலம் காற்றின் வழியாக மனித நுரையீரலுக்குள் தஞ்சம் அடைந்தது. இப்போது பெட்ரோலில் காரீயம் நீக்கப்பட்டு விட்டது.

 சில உலோகங்கள் ஓரளவுக்கு உடலில் இருக்கலாம் அது கெடுதல் தராது என்பார்கள். ஆனால், காரீயம் சிறிதளவு உடலுக்குள் சென்றால் கூட கெடுதல்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com