இரவில் நன்றாக தூங்க இந்த 6 செடிகளை வீட்டில் வையுங்கள்!

Keep these 6 plants at home for a better night's sleep!
Keep these 6 plants at home for a better night's sleep!Image Credits: LinkedIn
Published on

வீட்டில் செடிகளை வளர்ப்பது நம்மைச் சுற்றி ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்குகிறது. அதுமட்டுமில்லாமல், சுத்தமான காற்று மற்றும் மனநிம்மதியை இது கொடுக்கிறது. இன்னும் சில செடிகளை வீட்டில் வைப்பதின் மூலம் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்குக்கூட நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். அந்தச் செடிகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. மல்லிச்செடி: மல்லிச்செடியில் இருந்து வரும் மல்லிப்பூவின் வாசம் தூக்கம் வரைவழைக்க சிறந்த மருந்தாகும். மல்லிப்பூவின் வாசனையை நுகரும்பொழுது மனப்பதற்றம் குறைவதாக சொல்லப்படுகிறது. ஜெர்மன் விஞ்ஞானிகள் மல்லிப்பூவின் வாசனை தூக்க மாத்திரையைப் போல செயல்படுவதாகக் கண்டுப்பிடித்துள்ளனர். மல்லிப்பூவின் வாசனையை நுகர்வது அமைதியான மனநிலையை உருவாக்கி நன்றாக தூக்கம் வரவழைக்க வழிச்செய்கிறது.

2. அப்ரமாஞ்சி: பல நூற்றாண்டுகளாக கிரேக்க மற்றும் ரோமானியர்கள் இந்த அப்ரமாஞ்சி செடியை மருத்துவத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள். ‘மருத்துவத்தின் தந்தை’ என அழைக்கப்படும் ஹிப்போகிரட்டீஸ்ஸால் இந்த அப்ரமாஞ்சி தூக்கமின்மை பிரச்னைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் செடி ஆழமான தூக்கத்தை வரவழைக்க உதவுவதாக சொல்லப்படுகிறது.

3. லேவெண்டர்: லேவெண்டர் தூக்கத்தை வரவழைக்க பயன்படுத்தப்படும் செடிகளுள் ஒன்றாகும். இந்தப் பூவிலிருந்து வாசனை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. லேவெண்டர் செடியிலிருந்து வரும் தனித்துவமான வாசனை நல்ல தூக்கத்தை வரவழைக்கக் கூடியது.

4. ஸ்நேக் பிளான்ட்: ஸ்நேக் பிளான்ட் பெரும்பாலும் அனைத்து வீடுகளில் வளர்க்கப்படும் செடியாகும். இதற்குத் தேவையான சூரிய ஒளியோ, தண்ணீரோ சரியாகக் கிடைக்கவில்லை என்றாலும் வளரக்கூடிய தன்மையைக் கொண்டது. எனவே, இதை வீட்டில் வளர்ப்பது சுலபமாகும். இந்தச் செடி அதிகமாக ஆக்ஸிஜனை இரவில் வெளியேற்றுவதால், நன்றாகத் தூங்க முடியும். மேலும், இந்தச் செடி காற்றிலுள்ள நச்சுக்களை நீக்கக்கூடிய தன்மையைக் கொண்டது.

5. லில்லி: லில்லி செடியை வீட்டில் வைப்பது அழகைக் கூட்டுவது மட்டுமில்லாமல், காற்றை சுத்தப்படுத்துகிறது. இந்தச் செடியை அறையில் வைப்பதால், அறையை 5 சதவிகிதம் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்கிறது. இதனால் நன்றாக சுவாசிக்க முடிவதால் நிம்மதியான உறக்கம் ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து Alkaline Water சுலபமாக தயாரிக்கலாம்!
Keep these 6 plants at home for a better night's sleep!

6. கற்றாழை: கற்றாழை மருத்துவ குணம் நிறைந்த செடியாகும். இந்தச் செடியை அறையில் வைப்பதன் மூலம் ஆக்ஸிஜனை அதிகரிக்க உதவுகிறது. இதை பராமரிப்பதும் மிகவும் சுலபமாகும். இது நீர்ப்பற்றுள்ள செடி என்பதால், தண்ணீரை தக்கவைத்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டது. கற்றாழையில் உள்ள ஜெல் காயம், வறண்ட சருமம், பூச்சிக்கடி, தீக்காயத்திற்கு பயன்படுத்தலாம். நல்ல சூரிய ஒளிப்படும் இடத்தில் இதை வைப்பதால் கற்றாழை செழிப்பாக வளரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com