அடிக்கடி வாய் மற்றும் நாக்கில் புண் ஏற்படுகிறதா? வைட்டமின் பி6 குறைபாடாக இருக்கலாம்; ஜாக்கிரதை!

அடிக்கடி வாய் மற்றும் நாக்கில் புண் ஏற்படுகிறதா? வைட்டமின் பி6 குறைபாடாக இருக்கலாம்; ஜாக்கிரதை!
https://www.aboutkidshealth.ca

னித உடலுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் வைட்டமின்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வைட்டமின்கள் உடலின் பல முக்கிய செயல்பாடுகளுக்குத் தேவைப்படுகின்றன. வைட்டமின் பி6 மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது உடலில் குறைந்தால் பலவித ஆரோக்கியக் கேடுகள் உண்டாகின்றன. அவை என்ன என்பது பற்றியும், அதை எப்படி நிவர்த்தி செய்வது என்பது பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

வைட்டமின் பி6 குறைந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்:

1. வாய் மற்றும் நாக்கில் புண்: வைட்டமின் பி6 குறைபாட்டால் வாய் மற்றும் நாக்கில் அடிக்கடி பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. வாய்ப்புண்கள், உதடுகள் வெடிப்பது, வாயைச் சுற்றி வறட்சி ஏற்படுவது, நாக்கு வீங்குவது மற்றும் நாக்கில் வலி, புண் போன்றவை ஏற்படும்.

2. சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள்: உடலில் வைட்டமின் பி6 ன் அளவு குறையும்போது சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னையை ஏற்படுத்தும். சிவந்த செதில் செதிலான சரும வெடிப்புகள் தோன்றும். இது பெரும்பாலும் முகம், முதுகு மற்றும் உச்சந்தலையை பாதிக்கின்றன.

3. நரம்புகளில் பாதிப்பு: கைகள் மற்றும் கால்களில் சேதமடைந்த நரம்புகளுக்கு வழிவகுக்கும். புற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால்களில் கூச்ச உணர்வு தோன்றும். அவ்வப்போது ஊசி கொண்டு குத்துவது போல, முட்களால் குத்துவது போன்ற உணர்வுகளை அவர்கள் அனுபவிப்பார்கள். மேலும், சிலருக்கு கை, கால்கள் உணர்விழந்து போதலும் தசை பலவீனமும் ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
சிறந்த பெற்றோரா நீங்கள் என்பதை அறிய சில எளிய ஆலோசனைகள்!
அடிக்கடி வாய் மற்றும் நாக்கில் புண் ஏற்படுகிறதா? வைட்டமின் பி6 குறைபாடாக இருக்கலாம்; ஜாக்கிரதை!

4. இரத்த சோகை: உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தியில் வைட்டமின் பி6 குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இது இரத்தத்தின் மூலம் உடலில் திசுக்களுக்கு ஆக்சிஜனை வழங்க உதவுகிறது. வைட்டமின் பி6 குறையும்போது இரத்த சோகைக்கு வழிவகுக்கும். இதனால் சோர்வு, தலைவலி, மூச்சுத் திணறல், பலவீனம், பசியின்மை, தலைச்சுற்றல் போன்றவை ஏற்படும்.

5. மனநிலை மாற்றங்கள்: வைட்டமின் பி6 அளவுகள் குறையும்போது அது மன நிலையிலும் பெருமளவு மாற்றத்தை உண்டாக்கும். எரிச்சல், பதற்றம், மனச்சோர்வு, மன அழுத்தம் போன்றவை உண்டாகும். குழந்தைகள் அடிக்கடி அழுவது வைட்டமின் பி6 அளவு குறைந்ததன் அறிகுறியாக இருக்கலாம்.

வைட்டமின் பி6ஐ உணவின் மூலம் பெறுவது எப்படி?

நாம் உண்ணும் உணவில் வைட்டமின் பி6ஐ பெறலாம். தினசரி ஒன்று இரண்டு வாழைப்பழங்கள், உருளைக்கிழங்கு, கொண்டைக் கடலை, ஆட்டின் கல்லீரல், சால்மன் மீன், கோழி போன்றவற்றில் வைட்டமின் பி6 இருக்கிறது. காய்கறிகளில் அடர் பச்சை நிறம் கொண்ட காய்கறிகள், கீரைகள் மற்றும் பப்பாளிப்பழம் ஆரஞ்சு பழம் போன்றவற்றில் வைட்டமின் பி6 இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com