உடலில் ஃபோலிக் அமிலம் குறைவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா?

Do you know the effects of folic acid deficiency in the body?
Do you know the effects of folic acid deficiency in the body?https://www.herzindagi.com

போலிக் அமிலம் அல்லது வைட்டமின் பி9 என்பது மனித உடலுக்குத் தேவையான இயற்கையாக நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். இந்தக் குறைபாடு ஃபோலேட் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் மனிதர்களுக்கு பல நோய்கள் மற்றும் குறைபாடுகளை ஏற்படுகின்றன.

ஃபோலிக் அமிலம் ஏன் முக்கியமானது?

ஃபோலிக் அமிலம் உடலை பராமரிக்க உதவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். நமது செல்லுலார் செயல்பாடுகள் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கும் செயல்பாட்டிற்கும் முக்கியமானது. டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ உருவாக்கத்தில் பயனுள்ளதாக இருப்பதோடு, புரத வளர்சிதை மாற்றத்திலும் இது ஈடுபட்டுள்ளது.

ஹோமோசைஸ்டீன், அமினோ அமிலம் சிதைவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த அமினோ அமிலம் அதிக அளவில் இருந்தால் உடலில் தீங்கு விளைவிக்கும். ஃபோலேட் ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களுக்கு அவசியமானது மற்றும் தாயின் வயிற்றில் கருவின் வளர்ச்சியில் முக்கியமானது. மனச்சோர்வு, பக்கவாதம், நினைவாற்றல் குறைதல் மற்றும் சிந்திக்கும் திறன் போன்ற நிலைகளில் இது பயன்படுகிறது.

உடலில் ஃபோலிக் அமிலம் குறையும்போது, பிறப்பு குறைபாடுகள், இருதய நோய் மற்றும் பிற உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். வயதானவர்களிடையே மனநலத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றையும் இது ஏற்படுத்தும்.

ஃபோலேட் குறைபாட்டின் அறிகுறிகள்: நாள்பட்ட சோர்வு, பலவீனம், நாக்கு வீக்கம், சோம்பல், எரிச்சல், தலைவலி, படபடப்பு வெளிறிய சருமம், அனீமியா, மூச்சுத் திணறல், கவனம் செலுத்துவதில் சிரமம், சருமம், நகம், முடியின் நிறத்தில் மாறுதல், நாக்கு மற்றும் வாயில் புண்கள் தோன்றுவது பொதுவான பலவீனம், மனச்சோர்வு மற்றும் பாலிநியூரோபதி. கர்ப்பிணிப் பெண்களில் குறைபாடு, பிறப்பு குறைபாடுகள் போன்றவை.

இதையும் படியுங்கள்:
மன்னிப்பு எனும் மாமருந்தின் அளவற்ற நன்மைகளை அறிந்து கொள்வோம்!
Do you know the effects of folic acid deficiency in the body?

ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகள்: புரோக்கோலி, கீரை, டர்னிப் போன்ற இலைக் கீரைகள், பச்சைக் காய்கறிகள், பீன்ஸ், சிட்ரஸ் பழங்கள் முட்டைகள், தானியங்கள், ராகி மற்றும் ஜவ்வரிசி, பருப்பு வகைகள், கோழி, சால்மன் போன்ற சில வகை மீன்களிலும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்: குளிர்பானங்கள், மாவு, ரொட்டிகள், பாஸ்தா, பேக்கரி பொருட்கள், குக்கீகள் போன்றவற்றை ஃபோலிக் அமிலம் குறைபாடு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com