நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் தெரியுமா?

நெருங்கிய உறவு திருமணம்
நெருங்கிய உறவு திருமணம்
Published on

த்தை மகள், மாமன் மகன், முறைப்பெண், அக்காவின் மகள் அல்லது அம்மாவின் சொந்த தம்பி என நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்துகொள்வது இன்னும் இந்தியாவில் பல  இடங்களில் வழக்கமாக உள்ளது. நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

இரத்த உறவுத் திருமணங்கள் நடப்பதில் தமிழகம் இரண்டாம் இடத்திலும், அருணாச்சல பிரதேசம் நாட்டிலேயே  முதல் இடத்திலும் இருக்கிறது. இரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் பிறக்கும் குழந்தைகளிடம் உடல் குறைபாடுகள் அதிகமாக உள்ளன. குழந்தைகள் மாற்றுத்திறனாளியாக பிறப்பதற்கு அவர்களது பெற்றோரின் வம்சாவளியின் மூலம் கடத்தப்பட்ட குறைபாடுள்ள மரபணுக்கள்தான் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள்:

மரபணுக் கோளாறுகளின் ஆபத்து: இரு பெற்றோர்களும் நெருங்கிய இரத்த சொந்தங்களாக இருக்கும்போது அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மரபணு மாற்றங்களைக் கொண்டு பிறப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன.  ஒவ்வொருவரும் சில பின்னடைவு மரபணுக்களைக் கொண்டுள்ளனர். அவை ஆதிக்கம் செலுத்தும் மரபணுவுடன் இணைக்கப்படும்போது பாதிப்பு ஏற்படுவதில்லை. இருப்பினும், இரு பெற்றோர்களும் ஒரே பின்னடைவு மரபணுவைக் கொண்டிருந்தால், அவர்களின் குழந்தை இந்த மரபணுவின் இரண்டு நகல்களைப் பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. இது ஒரு மரபணு கோளாறுக்கு வழிவகுக்கும்.

குறைபாடுகள்: குழந்தைகளிடம் அறிவாற்றல் குறைபாடுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. மேலும், பிறப்பு குறைபாடுகள் உள்ளிட்ட உடல் குறைபாடுகள் ஏற்படும்   வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமின்றி, அதிகரித்த குழந்தை இறப்பும் நேரலாம்.  குழந்தைப் பருவத்தில் அல்லது முன்கூட்டியே இறப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கலாம்.

உடல் கோளாறுகள்:

சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ்: இது ஒரு நுரையீரல் மற்றும் செரிமான அமைப்பை பாதிக்கும் கோளாறு.

தலசீமியா: இது இரத்த அழிவு சோகை என்கிற மரபு வழி கோளாறால் வரக்கூடிய நோய் ஆகும். நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் முடிப்பவர்களின் வாரிசுகளை இது தாக்குகிறது. இயல்பை விட குறைவான ஹீமோகுளோபின் மற்றும் குறைவான இரத்த சிவப்பணுக்களை உள்ளடக்கிய இரத்தக் கோளாறு இது.

அரிவாள் செல் இரத்த சோகை: இரத்த சிவப்பணுக்கள் தவறாக வடிவமைக்கப்பட்டு உடைந்து போகும் ஒரு கோளாறு.

இதையும் படியுங்கள்:
பாடாய்ப்படுத்தும் முதுகு வலியைப் போக்கும் 5 எளிய வழிமுறைகள்!
நெருங்கிய உறவு திருமணம்

டெய் சாக்ஸ் (Tay-Sachs) நோய்: இது மூளை, முதுகுத்தண்டு, நரம்பு செல்களுக்கு அழிவை ஏற்படுத்தும் ஒரு அபாயகரமான மரபணு கோளாறு நோய். இது பெற்றோரிடமிருந்து அவர்களின் குழந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது. இது குழந்தை பருவத்தின் பிற்பகுதியில் தொடங்கி முதிர்வயது வரை அறிகுறிகள் தொடரும். தசை பலவீனம், நடுக்கம், தசைப்பிடிப்பு, நடக்கும் திறன் இழப்பு, பேசுவது மற்றும் விழுங்குவதில் சிக்கல்கள் மற்றும் மனநலக் கோளாறுகள் ஏற்படலாம்.

பிறவி இதயக் குறைபாடுகள்: பிறக்கும்போதே இதயத்தில் உள்ள கட்டமைப்புச் சிக்கல்கள், நரம்புக் குழாய் குறைபாடுகள் மற்றும் பிற வளர்ச்சி குறைபாடுகள் போன்ற பிறவிக் குறைபாடுகளின் அதிக ஆபத்தோடு இந்தக் குழந்தைகள் பிறக்கலாம்.

எக்ஸ்பி என்ற ஆட்டோ சோமால் ரிசீசி கோளாறு: பிறக்கும் குழந்தைகளிடம் மரபணுக் கோளாறால் விளையும் X க்ரோமோசோம் காரணமாக சம்பந்தப்பட்ட ஆட்டோசோமல் ரிசசிவ் வியாதிகள் அதிகமாக தென்படுகின்றன.

அதிகரித்த குழந்தை இறப்பு: நெருங்கிய உறவில் மணம் செய்து கொள்ளும்போது பிறக்கும் குழந்தை இறந்து பிறப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். மேலும், பரம்பரைத் தன்மை, குழந்தை பருவ நோய்களின் அபாயம் காரணமாக  ஒட்டுமொத்த ஆயுட்காலம் குறைவது போன்றவை இருக்கும். இதனால் பெற்றோருக்கு குற்ற உணர்வு மற்றும் மன அழுத்தம் நேரலாம். எனவே, நெருங்கிய இரத்த சொந்தங்களில் திருமணம் நடைபெறுவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com