பாடாய்ப்படுத்தும் முதுகு வலியைப் போக்கும் 5 எளிய வழிமுறைகள்!

முதுகு வலியால் அவதிப்படும் பெண்
முதுகு வலியால் அவதிப்படும் பெண்
Published on

ணினியில் அதிகம் வேலை பார்ப்பவர்களின் மிக முக்கியமான பிரச்னை முதுகு வலி. ஆண்கள் முதல் பெண்கள் வரை என்றாவது ஒரு நாள் நிச்சயம் அதீத முதுகுவலியால் அவதிப்பட்டிருப்போம். என்னதான் இதற்காக வலி நிவாரணிகள் பயன்படுத்தினாலும் தற்சமயத்திற்கு மட்டுமே அவற்றால் அந்த வலியைப் போக்க முடியும்.

இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என்பது அவ்வளவு எளிதல்ல. ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதீத முதுகு வலியால் அவதிப்படுவார்கள். அதிலும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப் பெற்ற பெண்கள் பல மணி நேரம் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் உட்கார்வதிலும், தொடர்ச்சியாக வேலைப் பார்ப்பதிலும் பெரும் சிரமத்தைச் சந்திப்பார்கள். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக பிஸியோதெரபி சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்வார்கள். இந்த வரிசையில் முதுகு வலி பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு சில உடற்பயிற்சிகளை ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் அவசியம் பின்பற்ற வேண்டும்.

முதுகு வலியைப் போக்கும் 5 உடற்பயிற்சிகள்:

1. நேராக உட்காரவும்: முதுகு வலி பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்றால், முதலில் இடுப்பு மற்றும் முதுகுத் தண்டின் தசைகள் மற்றும் மூட்டுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்களது அன்றாட வாழ்க்கை முறைகளில் சில நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, நேராக அமர்ந்து உட்காருதல், எந்த வேலையைப் பார்த்தாலும் நிமிர்ந்து உட்கார வேண்டும். அலுவலக வேலைக்காக கணினி முன்பு அமரும்போது, நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். வீட்டு வேலைகளைச் செய்தாலும் இம்முறையைப் பின்பற்றவும்.

2. உடற்பயிற்சி: முதுகு வலி ஏற்படும் போதெல்லாம் உடல் எடையைக் குறைக்கவும் அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பார்கள். இதெல்லாம் முட்டாள்தனமாக தோன்றினாலும், அதீத முதுகுவலியைக் குறைப்பதற்கு சரியான தசை இயக்கம் கட்டாயம் தேவை. குனிந்து நிமிர்வது, இடுப்பு பகுதியை வலது மற்றும் இடதுபுறம் திருப்பி உடற்பயிற்சி செய்யவும். இவ்வாறு மேற்கொள்வது முதுகெலும்பைச் சுற்றியுள்ள உங்களது தசைகளை வலுவாக வைத்திருக்க உதவியாக இருக்கும்.

3. யோகா மற்றும் தியானம்: முதுகு வலிக்கு உடற்பயிற்சிகள் செய்வது ஒருபுறம் தீர்வாக அமைந்தாலும், மனம் மற்றும் உடல் செயல்பாடுகளில் எப்போதும் அதீத கவனம் செலுத்த வேண்டும். ஆய்வுகளின்படி, முதுகு வலிக்குத் தீர்வாக கொஞ்ச நேரம் யோகா மற்றும் தியானம் மேற்கொள்வது நல்லது.

இதையும் படியுங்கள்:
குடும்ப நிம்மதியை சீர்குலைக்கும் 7 பழக்கங்கள்!
முதுகு வலியால் அவதிப்படும் பெண்

4. நீச்சல்: நீரில் செய்யக்கூடிய நீச்சல் பயிற்சிகள் முதுகுவலி பிரச்னைகளைப் போக்க உதவும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. நீச்சல் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது உடலில் உள்ள தேவையில்லாத கலோரிகளை எரிக்க உதவியாக உள்ளது. மேலும், தசைகளையும் வலுப்படுத்துகிறது.

5. சுடு தண்ணீர் அல்லது ஐஸ் ஒத்தடம்: அதிக முதுகு வலி ஏற்படும் இடத்தில் சுடு தண்ணீர் அல்லது ஐஸ் கட்டியை வைத்து குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம்.

மேற்கூறிய 5 வழிமுறைகளைக் கையாண்டாலே முதுகு வலியின் பிடியிலிருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com