பாம்பு கடித்தவருக்கு முதலுதவி என்ன தெரியுமா?

பாம்பு கடித்தவருக்கு முதலுதவி என்ன தெரியுமா?
https://tamil.boldsky.com
Published on

ழைக் காலத்தில் வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்து விடுவது சாதாரணம். ஆனால், தற்போது அடிக்கும் வெயிலுக்கு நிலப்பகுதியில் நிலவும் வெப்பநிலை காரணமாக பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்து பலரையும் பயமுறுத்தி வருகிறது. பாம்பு என்றால் அனைவருக்கும் இனம் புரியாக பயம் இருக்கும். பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது.

பாம்பு என்றவுடன் பயப்படுவதற்குக் காரணம் அதன் விஷம்தான். பாம்புகளுக்கு பற்களில் விஷம் இருப்பதற்குக் காரணம் தனது இரையை வேட்டையாடுவதற்காகவே. ஆனால், பாம்புகள் மனிதர்களைக் கடிப்பது வேட்டையாடுவதற்காகவோ அல்லது கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தினாலோ அல்ல. மாறாக, மனிதர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்ற அச்சத்தினால்தான். பாம்பு கடித்தால் முதலுதவியாக என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பாம்பு கடித்து விட்டால் உடனடியாக சிலர் துணியால் பாம்பு கடித்த இடத்திற்கு மேல் இறுக்கமாகக் கட்டிவிடுவார்கள். இது முற்றிலும் தவறு. இப்படிச் செய்வதால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு அந்த பகுதி செயலிழந்து போகவும் வாய்ப்பு இருக்கின்றது. பாம்பு கடித்த இடத்தை அசைக்காமல் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பாம்பு கடித்துவிட்டால் ஓடவோ அல்லது நடக்கவோ கூடாது. இது விஷம் உடல் முழுவதும் விரைவாகப் பரவுவதைத் தடுக்க உதவும். பதறறம் இல்லாமல் இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். யாரையாவது உதவிக்கு அழைத்து கை தாங்களாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். பயம் கூடாது. பாம்பு முன் கையில் கடித்திருந்தால் கையை தொங்க விடக்கூடாது. கையை மடக்கி ஒரு துணியால் கட்டி கழுத்தோடு இணைத்துக் கொள்ள வேண்டும்.

பாம்பு கடித்தவுடன் முதலுதவி செய்வதாக நினைத்து பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து உறிஞ்சுவதை தவிர்க்க வேண்டும். இது முதலுதவி செய்பவருக்கும் உயிராபத்தை ஏற்படுத்தும். பாம்பு கடித்தவுடன் பதற்றம் அடையக் கூடாது. இதுவும் பாதிப்பை அதிகமாக்கிவிடும். கடித்த பாம்பின் அடையாளத்தைப் பார்த்துக்கொள்வது சிகிச்சை வழங்குவதற்கு துணை புரியும்.

இதையும் படியுங்கள்:
கோடை வெயிலில் உதடுகள் வறண்டு போகாமல் இருக்க 4 எளிய வழிகள்!
பாம்பு கடித்தவருக்கு முதலுதவி என்ன தெரியுமா?

நச்சுள்ள பாம்பே கடித்திருந்தாலும் கூட பதற்றமடையக் கூடாது. கடித்தது விஷப் பாம்பு இல்லை என்றும் சாதாரண பாம்புதான் கடித்தது என்று சொல்லி பாம்பு கடித்தவருக்கும் நம்பிக்கை ஊட்ட வேண்டும். அதுதான் பாம்பு கடித்தவரை உயிர் பிழைக்க வைக்கும் முதல் மருந்து. விஷப் பாம்புகள் கடித்தால் கடித்த இடத்தில் பாம்பின் பல் தடம் பதிந்திருக்கும். கடித்த இடத்தில் வலி, வீக்கம் இருக்கும். அந்த இடம் சிவந்து போய் இருக்கும். பாம்பு கடி வாயில் இரண்டு பெரிய பள்ளங்களும் அதற்குக் கீழாக சிறு சிராய்ப்புகளும் இருந்தால் கடித்தது நல்ல பாம்பு.

நல்ல பாம்பு, கட்டுவிரியன், பவழப்பாம்பு கடித்தால் தலை சுற்றல், மயக்கம் வரும், நாக்கு செயலிழந்து போகும். நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். வாயிலிருந்து நுரை போல வெளியே வரும். விரியன் கடித்தால் கடிபட்ட இடத்தில் வீங்கும், தசை சிவப்பேறும், சில சமயங்களில் வாயிலும், மூக்கிலும் இரத்தம் கூட வரும். நா வறட்சி ஏற்படும். கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் கடித்தால் கடித்த இடத்தில் அதிக வீக்கம் மற்றும் வலி இருக்கும். நல்ல பாம்பு, கட்டுவிரியன் கடித்தால் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திலும், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் கடித்தால் 2 மணி நேரத்திலும் மருத்துவ மணைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் அப்போதுதான் உயிர் பிழைக்க முடியும். இரத்த பரிசோதனை செய்தாலே எந்த பாம்பு கடித்தது என்பதை கண்டுபிடிக்க முடியும். எனவே, கடித்த பாம்பை தேடி நேரம் செலவழிக்கக் கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com