இஸ்லாமியர்கள் விரும்பி உண்ணும் கடல் பாசியின் மகிமை தெரியுமா?

Marine algae
Marine algaehttps://tamil.webdunia.com
Published on

டல் பாசி (sea weed) என்பது கடல் நீருக்குள் வளரும் ஒரு வகை தாவரம். இது நல்ல நீர், உப்பு நீர் என்ற பாகுபாடின்றி எதிலும் வளரக்கூடியவை. கடலில் நீருக்கடியில் உருவாகும் பூஞ்சை (Fungus) ஆல்கேவாக வளரும். இவை மேலும் வளரும்போது கடல் பாசியாக இது மாறுகிறது. பச்சை, சிவப்பு, பழுப்பு என பல வகை இதில் உண்டு. கடல் பாசி பல உயிரினங்களுக்கும் நம் உடலுக்கும் பல நன்மைகளை அளிக்கக்கூடியது. உலகில் 25000 வகையான கடல் பாசிகள் உள்ளன. ஆனால், உணவாகப் பயன்படுவது 75 மட்டுமே.

கடல் பாசியில் மனித உடல் செயல்பட தேவையான 102 தாதுக்களில் 92 தாதுக்கள் உள்ளன. கடல் பாசி கார்பனை உள்ளிழுத்து, அதிகளவு ஆக்சிஜனை வெளியேறச் செய்பவை. கடல் பாசியில் வைட்டமின் A, C, D, E, K, B-1, B-6, B-12, கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், அயோடின், நார்ச்சத்து, ப்ரீபயோடிக்ஸ் போன்றவை உள்ளது. கடல் பாசியில் பாலை விட அதிக கால்சியம் சத்து உள்ளது. பருப்புகள் மற்றும் அரிசியை விட நார்ச்சத்துள்ளது. பசலைக்கீரையில் உள்ளதை விட அதிக இரும்புச்சத்து உள்ளது.

ஆரஞ்சு பழத்தை விட அதிக வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. சோயா பீன்ஸில் உள்ளதை விட அதிக புரோட்டீன் சத்து உள்ளது. மீனிற்கு இணையான ஒமேகா 3 ஊட்டச்சத்து உள்ளது. 500 மில்லி கிராம் கடல் பாசிகள் ஒரு கிலோ காய்கறிகளுக்கு சமம். அதிக நோய் எதிர்ப்பாற்றல் மிக்கது. உடல் உள் காயங்களை ஆற்றும் சக்தி கொண்டது. உடலில் இறந்த செல்களை வெளியேற்றி புதிய செல்களை புதுப்பிக்கும் ஆற்றல் உடையது. புற்றுநோய், சர்க்கரை நோய், காச நோய், மூட்டு வலி, இரும்புச்சத்து குறைபாடு, மாதவிடாய் சார்ந்த நோய்கள் போன்றவற்றை தடுக்கும் ஆற்றல் மிக்கது.

கடல் பாசியில் முட்டைக்கு இணையான புரதச்சத்து 20 முதல் 30 சதவீதம் உள்ளது. கார்போஹைட்ரேட் 20 முதல் 30 சதவீதம் வரை உள்ளது. ஒரு கிராம் கடல் பாசியில் 5 மி.கி. அயோடின் உள்ளது. 700 மி.கி. கால்சியம் உள்ளது. இதிலுள்ள அயோடினானது தைராய்ட் சுரப்பிகளை சமநிலையில் சுரக்கச் செய்து ஹைபோ தைராய்ட் மற்றும் ஹைப்பர் தைராய்ட் குறைபாடுகளை குணமாக்கும். கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். அவற்றின் தேய்மானத்தை குறைக்கும். வளர்ச்சிக்கும் உதவும். ஆன்டி ஆக்சிடன்டஸ் செல் தேய்மானத்தைத் தடுக்கும். ஆக்சிடேட்டிவ் சேதத்தையும் தடுக்கிறது. வைட்டமின் B1 இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, டைப்2 டயாபடிக் ஆகும் நிலையை தவிர்க்க உதவுகிறது.

இதிலுள்ள நார்ச்சத்து நச்சுக்களை வெளியேற்றும். ஜீரண மண்டலத்தின் முழு ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மலச்சிக்கலைத் தீர்க்கும். உயர் இரத்த அழுத்தத்தை சமப்படுத்தும். கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கிறது. இவற்றினால் எல்லாம் இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது. பசி தாங்கியாய் இருப்பதால் அடிக்கடி எதையாவது உண்ணும் உணர்வு ஏற்படாது.

இரைப்பை மற்றும் குடலில் வளரும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உறுதுணை புரிகிறது. இதிலுள்ள ப்ரீபயோடிக்ஸ் மாதவிடாய் நிற்கும் சமயத்தில் பெண்களுக்கு அதிக அளவில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜனை குறைக்கும், ‘லிக்னன்’ சத்து கடல் பாசியில் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் குளோரைடு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

கடல்பாசி என்பது நம் குடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. கொஞ்சமாக சாப்பிட்டாலும் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். சிறுகுடலைத் தூண்டிவிட்டு, செரிமான இயக்கத்தை எளிதாக்கும். மலச்சிக்கல் பிரச்னை வராமலிருக்கவும் கடல்பாசி உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்னைக்கு மருந்துகள், மலமிளக்கிகள் எடுத்துக்கொள்வோர், அவற்றுக்கு பதில் கடல் பாசி எடுத்துக் கொள்ளலாம். எந்தவிதப் பக்கவிளைவும் இல்லாமல், மலத்தை இளக்கி வெளியேறச் செய்வதில் கடல்பாசி பெரிய அளவில் உதவும்.

இதையும் படியுங்கள்:
படுத்தவுடன் உறக்கம் பெற பருக வேண்டிய 5 வகை பானங்கள்!
Marine algae

கடல் பாசியில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்யும். இந்த இயற்கை அதிசயம் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து பளபளக்கச் செய்யும். இது உயர்தர மாய்ஸ்சரைசர்களைப் போலவே ஊட்டமாகவும் வலுவாகவும் உணர வைக்கிறது என்று சரும மருத்துவர்கள் கூறுகிறார்கள். கடல் பாசி துகள்களை பன்னீரில் கலந்து திரவ நிலையில் முகத்தில் மெலிதாகப் பூசி காயவிட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் கண்களைச் சுற்றி உள்ள கருவளையம், பருக்கள் மறையும். சரும சுருக்கம் நீங்கும்.

கடல் பாசி இஸ்லாமியர்களின் முக்கிய உணவு. ரமலான் நோம்பு நேரத்தில் வயிற்றில் புண் ஏற்படுவதைத் தவிர்க்க இதனை பயன்படுத்தி வருகிறார்கள். ஜப்பான் மற்றும் சீன நாட்டில் அவர்களின் உணவில் 25 சதவீதம் கடல் பாசி உணவுதான். விண்வெளி வீரர்கள் உணவிற்காக மாத்திரைகள் சாப்பிடுவது கடல் பாசியைத்தான்.

கடல் பாசி ஜிகர்தண்டாவில் ஒரு கூட்டுப் பொருளாக சேர்க்கப்படுகிறது. இதை சமைத்தும், சாலட்களில் சேர்த்தும் உண்ணலாம். இதை நீரில் கரைத்து தோட்டத்து செடிகளுக்கு, குறிப்பிட்ட இடைவெளியில் முறைப்படி ஊற்றி வர, செடிகள் ஆரோக்கியமாய் வளரும். இதிலிருந்து உரமும் தயாரிக்கலாம். அழுகிய நிலையில் உள்ள கடல் பாசியை உணவில் உபயோகிப்பது ஆரோக்கியத்துக்கு சீர் கேடு. இதைத் தவிர்ப்பது நலம்.12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் 1 கிராம் அளவில் உள்ள கடல் பாசி மாத்திரைகளை தினமும் இரண்டு சாப்பிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com