மாதுளம் பூக்களின் மகத்தான நன்மைகள் தெரியுமா?

Pomegranate flowers
Pomegranate flowershttps://www.pinterest.com

மாதுளம் பழத்தை விட மாதுளம் பூவில் அதிக அளவிலான நன்மைகள் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன. மாதுளம் பூவில் இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

மாதுளம் பூவை அப்படியே சாப்பிட்டால் இரத்த விருத்தி அதிகமாகும். இரத்த சோகை உள்ளவர்கள் இதனை சாப்பிடலாம். மாதுளம் பூ, கசகசா, வேப்பம் பிசின் ஆகியவற்றை அரை ஸ்பூன் அளவு எடுத்து காலை, மாலை என இரு வேளையும் தேன் கலந்து சாப்பிட்டு  வந்தால் சிறுநீருடன் இரத்தம் கலந்து வருவது விரைவில் நிற்கும்.

மாதுளம் பூக்களை உலர்த்தி, பின்னர் பொடியாக்கி, நாள் ஒன்றுக்கு மூன்று வேளையும், ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டால் இரு நாட்களில் இருமல் குறையும். மாதுளம் பூவை பசும்பாலில் வேக வைத்து, சிறிது தேன் கலந்து அருந்தி வந்தால் நரம்புகள் வலிமை பெறும். குறிப்பாக நரம்புத் தளர்ச்சியினால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல அருமருந்து என்றே சொல்லலாம்.

அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றம், வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால், மாதுளம் பூவை கஷாயம் செய்து அருந்துவது  மிகவும் நல்லது. அருகம்புல் சாறுடன் மாதுளம் பூ சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகள் விரைவில் சரியாகும்.

இதையும் படியுங்கள்:
இஞ்சி டீ யாருக்கெல்லாம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா?
Pomegranate flowers

பெண்களுக்கு கருப்பை வலுவடைய மாதுளம் பூ சாறு சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. மாதுளம் பூவிற்கு வாய் புண்கள்,குடல் புண்களை ஆற்றுகிற தன்மை உண்டு. மாதுளம் பூவை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அத்துடன் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தொண்டைப் புண், வயிற்றுப் புண் உள்ளிட்டவை விரைவில் சரியாகும்.

மாதுளம் பூவை தலையில் வைத்து அணிந்து கொண்டால் தலைவலி, தலைபாரம் போன்ற பிரச்னைகள் விரைவில் தீரும். மாதுளம் பூச்சாற்றை சிறிது பனங்கற்கண்டுடன் சேர்த்து  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், விரைவில் இரத்த மூலத்திலிருந்து விடுபடலாம். மேலும், உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள மாதுளம் பூவை அப்படியே சாப்பிட்டு நலம் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com