அருகுலா கீரையின் ஆரோக்கிய நன்மைகளை அறிவோமா?

Do you know the health benefits of arugula Lettuce?
Do you know the health benefits of arugula Lettuce?https://gardenerspath.com
Published on

ருகுலா (Arugula) என்பது மத்திய தரைக்கடல் பிரதேசத்தில் தோன்றி, அதன் பிறகு மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ள ஒரு வகைக் கீரை. இதிலுள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இப்பொழுது பார்ப்போம்.

இதிலுள்ள வைட்டமின் K எலும்புகளின் வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. கால்சியம் அளவை சமநிலைப்படுத்தவும் எலும்பு மெட்டபாலிசத்தை திறம்பட நடைபெறவும் செய்கிறது. நியூரோனால் எனப்படும் மூளைக்குச் செல்லும் நரம்புகளில் ஏற்படும் சிதைவை தடுக்கிறது. பற்கள், தசைகள், ஜீரண மண்டல உறுப்புகள், முடி ஆகியவற்றின் பலத்திற்கு தேவையான ஊட்டச் சத்துக்களை அளிக்கிறது. கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. இரத்தக் குழாய்களில் உருவாகும் இரத்தக் கட்டிகளையும் கரைக்கக் கூடியது.

இதிலுள்ள பொட்டாசியம், சோடியத்தினால் வரும் எதிர்மறை விளைவுகளைக் குறைத்து உயர் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துகிறது. அதிகளவு ஊட்டச் சத்துக்களும் நைட்ரேட்களும் இதயத்தைச் சுற்றியுள்ள இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தைப் பலப்படுத்தி இதய நோய்கள் வருவதைத்  தடுக்கின்றன.

அருகுலாவில் நார்ச்சத்துக்கள் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவல்ல ஃபைடோ கெமிக்கல்கள் அதிகளவில் உள்ளன. சர்க்கரை, கலோரி, கொழுப்பு, கார்போஹைட்ரேட் போன்றவை குறைந்த அளவிலேயே உள்ளதால் எடையை சமநிலையில் பராமரிக்க முடிகிறது.

இதையும் படியுங்கள்:
எலும்புகளுக்கு இயற்கையான ஊட்டச்சத்து தரும் உணவுகள்!
Do you know the health benefits of arugula Lettuce?

இதிலுள்ள வைட்டமின் A கண்புரை உருவாகாமல் தடுப்பதோடு ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. மற்ற வைட்டமின்களும், சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்களும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. உண்ணும் உணவிலிருந்து இரும்புச்சத்தை உறிஞ்ச உதவுகின்றன. சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை சிறப்பாக இயங்க உதவுகின்றன. மன அழுத்தத்தையும் நாள்பட்ட நோய்களையும் தரக்கூடிய ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கின்றன.

இக்கீரையை சமைக்காமல் பச்சையாக சாலட், பீட்சா, சாண்ட்விச் போன்றவற்றோடு சேர்த்து சாப்பிடுவது அதிக பலன் தரும். மருத்துவர் ஆலோசனை பெற்று இக்கீரையை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com