அவகோடா பழத்தோலில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அவகோடா பழம்
அவகோடா பழம்https://manithan.com
Published on

மாம்பழம் மற்றும் ஆப்பிள் பழங்களின் தோலை விட சற்றே கடினமாகவும் லேசான கசப்பு சுவையுடனும் கூடிய அவகோடா பழத்தின் தோலில், அதன் சதைப் பகுதியில் உள்ளதை விட கூடுதலாக ஊட்டச் சத்துக்கள் உள்ளன. இது ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் குணம் கொண்டது. இதன் தோலை மைக்ரோ ஒவனில் அல்லது வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து, உடைத்துப் பவுடராக்கி சூப், சாலட், கிரேவி போன்ற உணவுகளோடு சேர்த்து உண்ணும்போது பலவித ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. டயட்டரி ஃபைபர்: இதிலுள்ள டயட்டரி நார்ச்சத்தானது சிறப்பான செரிமானத்துக்கும் ஆரோக்கியமான குடல் இயக்கத்துக்கும் உதவும்.

2. ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்: இதிலுள்ள பினாலிக் காம்பௌண்ட் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி செல்கள் சிதைவடையாமல் பாதுகாக்கும். பாலிபினால்ஸ் மற்றும் பிளவனாய்ட்ஸ் போன்றவை ஜீரண மண்டல உறுப்புகளை அசுத்தமின்றிப் பாதுகாக்கவும் எடைப் பராமரிப்பிற்கும் உதவும். வைட்டமின் C நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், வைட்டமின் E சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். இதில் பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் போன்ற முக்கியமான கனிமச் சத்துக்களும், கரோட்டினாய்ட் மற்றும் ஆரோக்கியம் தரும் கொழுப்புகளும் அதிகம் உள்ளன. இவை தசைகள் மற்றும் நரம்பு மண்டலங்களின் சிறப்பான இயக்கத்திற்கும், எலும்புகள் மற்றும் கண்களின் ஆரோக்கியம் மேன்மை அடையவும் சிறந்த முறையில் உதவி புரியும். மேலும், இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தி இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

3. சருமப் பராமரிப்பு: அவகோடா பழத்தின் தோலை அரைத்துப் பேஸ்ட்டாக்கி, வறட்சியான சருமம் உள்ளவர்கள் முகத்தில் மாஸ்க் போல போட்டு பதினைந்து நிமிடம் வைத்தெடுக்க சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசையானது முகத்திற்கு மிருதுத்தன்மை, நீரேற்றம் மற்றும் பளபளப்பு கொடுக்கும். வைட்டமின் E சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட்டாக செயல்புரிந்து சருமத்தில் உண்டாகும் சிரங்கு மற்றும் சோரியாஸிஸ் போன்ற நோய்களையும் குணப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
ஏசி அறையில் தூங்குபவரா நீங்கள்? போச்சு! 
அவகோடா பழம்

4. உபயோகிக்கும் முறை: அவகோடா பழத்தின் தோலை சிறிது சதையுடன் சேர்த்து அரைத்து பேஸ்டாக்கி அல்லது தோலை காய வைத்துப் பொடியாக்கி ஸ்மூதி, சாலட் டிரஸ்ஸிங், டிப், கிரேவி போன்றவற்றுடன் சேர்த்து உண்ணலாம். அவகோடா பழத்தின் உலர்ந்த தோலை உடைத்து டீ போடும்போது அதனுடன் சேர்த்து டீ தயாரித்து அருந்தினால் அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச் சத்துக்கள் உடம்பிற்குக்  கிடைக்கும். அவகோடா பழத்தின் தோலை உலர்த்தி அரைத்த பவுடரை மண்ணுடன் கலந்து  செடிகளுக்கு இயற்கை உரமாகவும் போடலாம்.

இத்தனை நன்மைகளை உள்ளடக்கிய அவகோடா பழத்தின் தோலை தூர எறிந்து விடாமல் நாமும் நல்ல முறையில் உபயோகித்துப் பலனடைவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com