பிளாக் காபியின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

Black coffee
Black coffee
Published on

காலையில் எழுந்ததும் காபி குடிக்காமல் இருந்தால், பலருக்கும் அந்த நாளே சிறக்காது. பில்டர், இன்ஸ்டன்ட் என ஏதாவதொரு வகையில் காபியின் ‌மணம் நம்மை கட்டிப் போட்டுள்ளது. காபி குடிப்பதை நிறுத்த முடியாது, வெயிட்ம் குறையணும். கலோரி ஏறக் கூடாது என நினைப்பவர்களுக்கு பிளாக் காபி நல்ல சாய்ஸ்.

வழக்கமான காபியில் சேர்க்கப்படும் சர்க்கரை, பால் இல்லாத கருப்பு காபி நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்கிறது ஆய்வுகள். நீரிழிவு நோய், பக்கவாதம், இதய நோய்கள் போன்ற நோய்களை தடுக்கும் ஆற்றல் கருப்பு காபி க்கு உண்டு.

காபி குடிப்பதால் பதற்றம், தூக்கமின்மை, சோர்வு, தலைவலி, வேகமான இதய துடிப்பு, நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன. உடலில் பித்தத்தை அதிகரிக்கிறது. இதையெல்லாம் தடுக்கும் பானமாக பிளாக் காபி பலன் தருகிறது.

பிளாக் காபியில் கலோரி இல்லை. அதனால் எடை அதிகரிக்கும் என்று பயமில்லை. பிளாக் காபியில் இருக்கும் அதிகப்படியான காஃபைன் நம் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. ஆற்றலை அதிகரித்து பசியை கட்டுப்படுத்துகிறது. இதிலுள்ள குளோரோஜெனிக் அமிலத்தால் குளுக்கோஸ் உற்பத்தியின் அளவு குறைகிறது.

நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது. அட்ரீனல் அளவை அதிகரிக்கிறது. கல்லீரல் நொதிகள் மற்றும் நச்சுகளை குறைக்க பிளாக் காபி உதவுகிறது. கல்லீரல் புற்றுநோய், ஹெபடைடிஸ் மற்றும் கல்லீரல் சிரோசிஸ் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
மன அமைதியைத் தரும் அதிகாலை தியானம்!
Black coffee

உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க வல்லது. மூளையை, நரம்புகளை வலுவாக்கி ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. நினைவாற்றலை அதிகப்படுத்துவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அல்சைமர் நோய் அபாயத்தைக் குறைக்க வல்லது.

பிளாக் காபி அதிகமாகக் குடிக்கக் கூடாது. இது தூக்க பழக்கத்தை மாற்றக் கூடியது. ஹைபராசிடிட்டிக்கு வழிவகுக்கும். உடல் தாதுக்கள் உறிஞ்சுவதை கடினமாக்கும் என்பதால் அளவாக பிளாக் காபி அருந்துவது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com