நொதிக்கச் செய்து தயாரிக்கப்படும் உணவுகளில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

நொதிக்கச் செய்த உணவுகள்
நொதிக்கச் செய்த உணவுகள்
Published on

ரு உணவைத் தயாரிப்பதற்கு முன்பு அதன் மூலப்பொருள்களை சேர்த்து ஊற வைத்து அரைத்து அல்லது உலர் நிலையில் பவுடர் ஆக்கி, பின் தேவைப்படும்போது தண்ணீரில் கரைத்து என சில வழிகளில் தயார் செய்து அதை பல மணி நேரம் நொதிக்க விட்ட பின் அந்த உணவைத் தயாரிப்பதே ஃபெர்மென்டெட் ஃபுட் (Fermented food) எனப்படும். நம் முன்னோர்கள் விரும்பிச் செய்து உட்கொண்ட பல முக்கிய உணவுகள் இவ்வாறு தயாரிக்கப்பட்டவையே. அந்த மாதிரியான சில உணவுகள் பற்றிய விவரங்களை இப்பதிவில் பார்ப்போம்.

1. இட்லி: தென் இந்தியர்களின் முக்கிய உணவு இட்லி. இது சுலபமாக ஜீரணமாகக் கூடியது. லேசான ஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கும் வயிற்றில் எந்த உபாதையும் தராது. இட்லி, அரிசி மற்றும் உளுந்து மாவைக் கலந்து 10 மணி நேரம் நொதிக்க வைத்த பின் தயாரிக்கப்படும். அந்த நேரத்தில் லாக்டோபசிலஸ் போன்ற பாக்டீரியாக்கள் உற்பத்தியாகி மாவை புளிக்கச் செய்யும். இதனால் இரும்புச் சத்து போன்ற நுண்ணுயிர்ச் சத்துக்கள் அதிகம் ஆகும். ஜீரணம் சிறப்பாக நடைபெறும்.

2. தோசை: இட்லியை தயாரிக்கும் அதே முறையை பின்பற்றி செய்வதே தோசை. இந்த மாவை நொதிக்கச் செய்யும்போது உற்பத்தியாகும் நல்ல பாக்டீரியாக்கள் புரதத்தையும் கார்போஹைட்ரேட்களையும் உடைப்பதற்கு உதவி புரிந்து செரிமானத்தை சுலபமாக்கும். தோசை ஜீரண மண்டல உறுப்புகளுக்கு நல்ல ஆரோக்கியம் தரவும் ஊட்டச் சத்துக்கள் உறிஞ்சப்படவும் சிறந்த முறையில் துணை நிற்கும்.

3. பட்டர் மில்க்: இது ஒரு நொதிக்கச் செய்த, ப்ரோபயோடிக்ஸ் நிறைந்த பால் பொருள்களால் ஆன சிறந்த பானம். இதிலுள்ள ப்ரோபயோடிக்ஸ் குடலில் உள்ள நன்மை தரும் நுண்ணுயிரிகளை சமநிலைப்படுத்தி ஆரோக்கியமாக வளர உதவும். லாக்டோஸ் சுலபமாக ஜீரணமாகவும் உதவி புரியும். மேலும் பட்டர் மில்க்கில் கால்சியம் மற்றும் வைட்டமின் B12 சத்துக்களும் உள்ளன. இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் எனர்ஜி மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெறவும் உதவும்.

4. கஞ்சி: இந்தியர்களின் பாரம்பரிய உணவு இது. கேரட், கடுகு விதைகளை தண்ணீர் சேர்த்து நொதிக்கச் செய்து தயாரிக்கப்படும் பானம். இதிலுள்ள ப்ரோபயோடிக்ஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் ஆரோக்கியமாய் வளர உதவும். இதன் மூலம் குடல் இயக்கம் சிறப்படையும். கஞ்சி நொதிக்கச் செய்து தயாரிக்கப்படும் உணவானதால் இதில் நுண்ணூட்டச் சத்துக்களும் பல மடங்கு பெருகி கஞ்சியை ஓர் ஊட்டச் சத்து மிக்க புத்துணர்வு பானமாக மாற்றுகின்றன.

இதையும் படியுங்கள்:
ஒடிசாவின் ஒப்பற்ற பாரம்பரிய ஓவியங்களை அறிவோமா?
நொதிக்கச் செய்த உணவுகள்

5. டோக்ளா: கடலை மாவை நொதிக்கச் செய்து அதில் தயாரிக்கப்படும் ஆவியில் வேகவைத்த ஸ்நாக்ஸ் இது. இதை நொதிக்கச் செய்யும் செயலில் ப்ரோபயோடிக்ஸ் உற்பத்தியாகி புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து போன்ற  ஊட்டச்சத்துக்களின் அளவை உயர்த்தும். மேலும், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவை சமநிலைப்படுத்தி ஆரோக்கியமாய் வளர உதவும். இதனால் ஜீரணம் சிறப்பாகும்.

6. ஊறுகாய்: காய் அல்லது பழங்களை எண்ணெய் மற்றும் ஸ்பைஸஸ் சேர்த்து நொதிக்கச் செய்து தயாரிக்கப்படுவது இது. இதில் சேர்க்கப்படும் மஞ்சள் மற்றும் வெந்தய விதைகளிலிருந்து பெறப்படும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்களால் வயிற்றில் வீக்கம் குறைந்து குடல் இயக்கம் சீராக நடைபெறும்.

7. பழம் கஞ்சி: இது கேரளாவில் பிரசித்தமான நொதிக்கச் செய்த ரைஸ் வாட்டர் ட்ரிங்க். இது நீர்ச்சத்தை அதிகரிக்கும்; நச்சுக்களை நீக்கும்; நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்; சத்துக்கள் நல்ல முறையில் உறிஞ்சப்பட உதவும்; ஜீரணத்தை சிறப்பாக்கும். மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் வீக்கம் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கவும் உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com