கஜக் எனப்படும் இனிப்பில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

Do you know the health benefits of gajak sweet?
Do you know the health benefits of gajak sweet?https://en.wikipedia.org
Published on

த்தியப்பிரதேஷ், பஞ்சாப், ஹரியானா போன்ற வட மாநிலங்களில் பிரசித்தி பெற்ற ஓர் இனிப்பு சுவை கொண்ட ஸ்நாக்ஸ் கஜக். இது எள் மற்றும் வெல்லம் சேர்த்து செய்யப்படுவது. இது குளிர் நேரங்களில் உடலுக்கு வெது வெதுப்பான சூட்டைத் தரக்கூடியது. இதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

எள் மற்றும் வெல்லத்தில் நிறைந்துள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சிக்கலின்றி நடைபெறச் செய்கிறது. கொழுப்பை எரித்து ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. எடைக் குறைப்பிற்கும் உதவி புரிகிறது. இதிலுள்ள கால்சியம் தசைகளை வலிமையாக்குகிறது. பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற மினரல்கள் ஈரலுக்கு ஆரோக்கியம் தருகின்றன. உடலுக்குள் உண்டாகும் குளிர்ச்சியை குறைக்க உதவுகின்றன.

வெல்லத்திலுள்ள இரும்புச் சத்தானது அனீமியா நோயை விரட்டுகிறது. எள்ளிலுள்ள நல்ல கொழுப்புடன் இரும்புச் சத்தும் சேரும்போது உடலுக்கு அதிகளவு சக்தி கிடைக்கிறது. உடற்பயிற்சிக்கு முன்பு அல்லது பின்னர் சிறிது கஜக் சாப்பிடுவது சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

குளிர் காலத்தில் நமது சருமம் வறட்சியடைந்து சொற சொறப்புடன் காணப்படும். எள்ளிலுள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது, இக்குறைபாடுகளை நீக்கி சருமம் பொலிவுடன் விளங்கச் செய்யும்.

இதையும் படியுங்கள்:
பெண்கள் ஏன் அவசியம் சிவப்பு காராமணியை உண்ண வேண்டும் தெரியுமா?
Do you know the health benefits of gajak sweet?

எள்ளுக்குப் பதிலாக வேர்க்கடலை சேர்த்தும் கஜக் செய்யலாம். பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற ஊட்டச்சத்து அதிகமுள்ள ட்ரை ஃபுரூட்ஸ் கலவையிலும் கஜக் செய்து அசத்தலாம். எள், வெல்லம், வேர்க்கடலை, ஏலக்காய் பவுடர் நெய் ஆகியவை சேர்த்து ஸ்பெஷலாக தயாரிக்கப்படும் பஞ்சரத்ன கஜக்கை வட இந்தியர்கள், 'ஆல் டைம் ஃபேவரைட் டெசர்ட்'டாக உண்டு மகிழ்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com