ஆட்டுப் பாலில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

Do you know the health benefits of goat milk?
Do you know the health benefits of goat milk?https://ta.quora.com

டல் தகுதியில் கவனம் செலுத்த விரும்புவோரின் பார்வை தற்போது ஆட்டுப்பாலின் பக்கம் திரும்பியுள்ளது. காரணம், பசும்பாலை ஒப்பிடுகையில்  இதில் ஊட்டச் சத்துக்கள் அதிகம்; எளிதில் ஜீரணமாகக் கூடியதாகவும் உள்ளது. ஆட்டுப்பாலில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஆட்டுப்பாலில் லாக்டோஸ், சிறிய கொழுப்பு உருண்டைகள் மற்றும் இணைந்த லினோலிக் அமிலம் ஆகியவை குறைந்த அளவிலேயே உள்ளன. இவை உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. மேலும், இப்பாலில் மீடியம் செயின் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் தேவையற்ற கொழுப்புகளை நீக்குகிறது. இரத்தக் குழாய் சார்ந்த நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இப்பாலிலுள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்தானது இதய நோய்கள் வராமல் பாதுகாக்கின்றன.

ஆட்டுப் பாலில் உள்ள ட்ரைக்ளிஸெரைட்ஸ் மற்றும் கொழுப்பு அமிலங்கள் சருமம் ஆரோக்கியமாக மிளிர உதவிபுரிகின்றன. இதிலுள்ள லாக்டிக் அமிலமானது சருமத்தில் படியும் அசுத்தங்களை அப்புறப்படுத்துகிறது. இதிலுள்ள மக்னீசியம் மற்றும் சிங்க்கானது இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவி புரிகிறது. பசும் பாலில் இருப்பதை விட இதில் அதிகளவு மீடியம் செயின் கொழுப்பு அமிலம் உள்ளதால் அது உணவுகளை சுலபமாக உடைத்து செரிமான இயக்கம் தொய்வின்றி நடைபெற உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
தண்ணீர் பாட்டில்கள் எவ்வளவு ஆபத்தானவை தெரியுமா?
Do you know the health benefits of goat milk?

ஆட்டுப்பாலில் வைட்டமின் B12, ஃபோலிக் ஆசிட் மற்றும் இரும்புச் சத்து அதிகளவு உள்ளது. இதனால் அனீமியா நோய் வரும் வாய்ப்பு குறைகிறது. இதில் கால்சியம், வைட்டமின் D, பாஸ்பரஸ் போன்றவற்றுடன் மேலும் பல அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. கால்சியம் சத்தை உடலுக்குள் உறிஞ்ச வைட்டமின் D உதவுகிறது. வலுவான எலும்புகள் அமைவதற்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் துணை புரிகின்றன.

புரோட்டீன் சத்துக்களின் மூலக்கூறுகளான பயோ ஆக்டிவ் பெப்டைட்கள் (Bioactive Peptides) ஆட்டுப்பாலில் உள்ளன. மேலும், செலீனியம் என்னும் ஆன்டி ஆக்சிடன்ட்டும் இதில் உள்ளது. இவை இரண்டும் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைத்து நல்ல ஆரோக்கியம் தருகின்றன. பசும் பால், பாதாம் பால், சோயா மில்க் போன்றவற்றை அருந்துவது போல, ஆட்டுப்பாலையும் உட்கொண்டு ஆரோக்கியம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com