தண்ணீர் பாட்டில்கள் எவ்வளவு ஆபத்தானவை தெரியுமா?

Water Bottle.
Water Bottle.https://www.bhoomitoday.com

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் எத்தனை நுண்துகள்கள் இருக்கின்றன என்பதை அமெரிக்கா ஆய்வு நிறுவனங்களும் கண்டறிந்துள்ளது.

இன்று தண்ணீர் பாட்டில்கள் இயல்பான ஒன்றாகவும், ஆடம்பர ஒன்றாகவும் மாறிவிட்டன‌. பெரும்பான்மையான மக்கள் தண்ணீரை எடுத்து வருவதை கௌரவ குறைச்சலாக எண்ணிக்கொண்டு அவற்றிற்கு மாறாக தண்ணீர் தேவைப்படும் பொழுது பாட்டில்களையும், பாக்கெட்டுகளையும் வாங்கி தண்ணீரை பருகி விட்டு உடனே தூக்கி எறிந்து விடுகின்றனர். இதன் மூலம் மட்டுமே உலகம் முழுவதும் வருடத்திற்கு 450 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் இயங்குகின்றன.

அதே நேரம் தினசரி மக்கள் பருகும் பாட்டில் தண்ணீர் எத்தனை ஆபத்தானவை என்பது அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஆய்வு பூர்வமாக நிரூபித்துள்ளது. இது குறித்து நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ் இதழ் வெளியிட்டு இருக்கக்கூடிய செய்தி குறிப்பு, உலகம் முழு வதும் இயல்பான ஒன்றாக மாறிப்போன தண்ணீர் பாட்டில் பயன்பாடு மனிதர்களுக்கான ஸ்லோ பாய்சனாக உள்ளது.

அமெரிக்காவின் பிரபல 25 நிறுவனங்களினுடைய தண்ணீர் பாட்டில்களை ஆய்வு செய்ததில் ஒவ்வொரு பாட்டிலும் நானோ பிளாஸ்டிக் துகள்கள் 1,10,000 முதல் 3,70,000 வரை காணப்படுகிறது. நானோ பிளாஸ்டிக் துகள்கள் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இது மனித உடலுக்கு பல்வேறு வகையில் பிரச்சனைகளை ஏற்படுத்த கூடியது.

இதையும் படியுங்கள்:
விராட் கோலியின் உடலை பிட்டாக வைத்திருக்க உதவும் கருப்புத் தண்ணீர்!
Water Bottle.

இதன் மூலம் மனித நுரையீரல் பெருமளவில் பாதிப்பை சந்திக்கும். குடல் பகுதிகள் அதிகப்படியான செயல்திறனை வெளிப்படுத்த நேரிடுகிறது. இதனால் செரிமான பிரச்சனை மனிதர்களுக்கு அதிகரிக்கும். பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படவும் காரணமாகிறது. மேலும் இது புற்றுநோய் தொற்று ஏற்பட வாய்ப்பாகவும் இருக்கிறது. அதற்கான ஆய்வுகள் தனியாக நடத்தப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு ஒரு லிட்டர் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் சராசரியாக 2,40,000 பிளாஸ்டிக் நுண்துகள்கள் காணப்படுகின்றன. இந்த பிளாஸ்டிக் நுண் துகள்கள் ஒரு மைக்ரோ மீட்டர் அளவிற்கு குறைவான நீளம் கொண்டதாகவும், மனித முடியை விட 70 மடங்கு குறைவான அகலம் கொண்டதாகவும் காணப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com