காஷ்மீரி மலைப்பூண்டின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

Do you know the health benefits of Kashmiri Mountain Garlic?
Do you know the health benefits of Kashmiri Mountain Garlic?https://www.indiamart.cஒom

மயமலைப் பிரதேசத்தில் காணப்படும் ஒரு வகை தனித்துவமான மருத்துவப் பொருள் மலைப் பூண்டு. இயற்கையாக விளையும் இவ்வகைப் பூண்டு முற்றிலும் ஆரோக்கியமானது. அளவில் சிறியதாக இருக்கும் இந்த பூண்டு, தினசரி நாம் உபயோகிக்கும் பூண்டில் இருப்பதை விட ஏழு மடங்கு அதிக ஆரோக்கிய நன்மைகள் கொண்டது. நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, நீரிழிவு போன்ற நோய்களை குணமாக்க வல்லது. ஆயுர்வேத மருத்துவத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கூட்டுப் பொருளாக இது சேர்க்கப்படுகிறது.

பனி மலைப்பூண்டு என்பதால் இதில் ஆன்டி மைக்ரோபியல், ஆன்டி பாக்டீரியல், ஆன்டி ஃபங்கல் (fungal), ஆன்டி வைரல் (antiviral), ஆன்டி ஆக்சிடன்ட்கள் ஆகிய நற்குணங்கள் மிக அதிகளவில் அடங்கியுள்ளன. இதிலிருக்கும் அல்லிசின் (allicin) என்ற பொருள் இதற்கு ஒரு கடுமையான (pungent) வாசனையைத் தருகிறது. காப்பர், செலீனியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், சல்பர், வைட்டமின் B1, B6, C, கால்சியம் ஆகிய வைட்டமின்களும் கனிமச் சத்துக்களும் இதில் அதிகம் அடங்கியுள்ளன.

காஷ்மீரி மலைப்பூண்டின் நன்மைகள்:

இதய நோய்களை குணமாக்கக் கூடியது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் சிஸ்டோலிக் (systolic) மற்றும் டயாஸ்டோலிக் (diastolic) அளவைக் குறைத்து சமநிலைப்படுத்த உதவுகிறது.

கேன்சரை குணமாக்கும் மருத்துவத்தில் இந்தப் பூண்டு முதன்மையான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இரத்த சர்க்கரை அளவை சம நிலையில் வைக்கக்கூடியது. சாதாரண இருமல் சளி ஃபுளு ஆகியவற்றைக் குணமாக்கும் தன்மை கொண்டது.

இதையும் படியுங்கள்:
பித்தப்பையில் கற்களா? பருகுங்கள் பரங்கிக்காய் ஜூஸ்!
Do you know the health benefits of Kashmiri Mountain Garlic?

மூளை நரம்பில் உண்டாகும் இரத்தக் கட்டிகளைக் கரைத்து மூளையைப் புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கும். நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். கல்லீரல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பராமரிக்க வல்லது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு பூண்டுப் பற்களை கையால் உரித்து வாயில் போட்டு மென்று தின்று ஒரு டம்ளர் வெந்நீர் அருந்த முழு பலன் கிடைக்கும். கத்தி போன்ற சமையலறை சாதனங்களை உபயோகித்து இந்தப் பூண்டை உரிப்பதோ நசுக்குவதோ தவறு. அப்படிச் செய்வதால் இந்தப் பூண்டிலுள்ள மருத்துவ குணங்கள் மாறிவிடும். பலனளிக்காது. மரத்தாலான சாதனங்களைப் பயன்படுத்துவது தவறில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com