‘கெவ்ரா வாட்டர்’ என்பது தாழம்பூவிலிருந்து காய்ச்சி வடிகட்டி எடுக்கப்படும் நீர். இது ரோஸ் வாட்டர் போன்றதொரு தெளிவான திரவம். ரோஸ் வாட்டர் அல்லது ஆரஞ்சு எஸ்ஸன்ஸுக்கு பதிலாக இதை சமையலில் உபயோகிக்கலாம். மீட் (Meat) உபயோகித்து செய்யும் உணவுகள், ஆரோக்கிய பானங்கள் மற்றும் டெஸ்ஸர்ட்களிலும் கெவ்ரா வாட்டரை சேர்க்கலாம்.
ரசகுல்லா, ரசமலாய் போன்ற இனிப்புகளை இதில் ஊற வைத்து எடுக்கும்போது அவற்றிற்கு மலரின் மணமும் கூடுதல் சுவையும் கிடைக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் மிக வித்தியாசமான வாசனைக்காகவும் சுவைக்காகவும் மொகல் பிரியாணியின் தயாரிப்பில் கெவ்ரா வாட்டர் முக்கிய இடம் பிடிக்கிறது. இதிலுள்ள ஆரோக்கிய நன்மைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வெப்ப காலங்களில் இந்த நீரை குளிர் பானங்களில் சேர்க்கும்போது உடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. இது ஜீரண மண்டல உறுப்புகளை அமைதிப்படுத்தி சிறப்பான செரிமானத்துக்கு உதவுவதாக நம்பப்படுகிறது. இதிலிருக்கும் கவர்ச்சிகரமான வாசனையானது உடல் சோர்வையும் அயற்சியையும் நீக்கி, ஸ்ட்ரெஸ்ஸின்றி அமைதி பெறச் செய்கிறது.
இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தீங்கு தரும் ஃபிரிரேடிக்கல்களுக்கு எதிராகப் போராடி ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க உதவுகின்றன. கெவ்ரா வாட்டரை சருமத்தின் மீது மேற்பூச்சாகத் தடவி வைக்கும்போது சருமத்துக்கு ஆரோக்கியமான மினு மினுப்பும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.
கெவ்ரா வாட்டர் ரொமான்டிக் மூட் வரவழைக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது. கெவ்ரா வாட்டரின் வாசனையை நுகரும்போது அது தொண்டைச் சளியை நீக்கி சிரமமின்றி சுவாசிக்க உதவுகிறது. கெவ்ரா வாட்டரின் சுகந்தமான வாசனை சந்தோஷமான மனநிலையை அதிகரிக்கச் செய்து மனதிற்குள் நேர்மறை எண்ணங்களை உருவாக்குகிறது.
இத்தனை நன்மைகளும், மணமும், சுவையும் தரும் கெவ்ரா வாட்டரை நாமும் உபயோகித்து உணவுக்கு கூடுதல் சுவையும் மணமும் சேர்க்கலாமே!