அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

People In AC
The Long-Term Use of Air Conditioning
Published on

ஏர் கண்டிஷனிங் என்பது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இது கொளுத்தும் வெப்பத்திலிருந்து நிவாரணம் அளித்து, குளிர்ச்சியான உட்புற சூழலை உருவாக்குகிறது. இருப்பினும் ஏசியில் நீண்ட நேரம் இருப்பதால், நமது ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் அதிக நேரம் ஏசியில் இருப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி பார்க்கலாம். 

  1. சருமப் பிரச்சனைகள்: நீண்ட நேரம் ஏசியில் இருப்பதால் உட்புறத்தில் உள்ள ஈரப்பதம் குறைந்து வறட்சியை ஏற்படுத்தலாம். இது வறண்ட சருமம், அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே அறையில் ஏசியை குறைந்த நேரமே பயன்படுத்துங்கள். 

  2. சுவாசப் பிரச்சனைகள்: குளிர்ந்த சூழலில் நீண்ட நேரம் இருப்பதால் தொண்டை வறண்டு சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது சுவாசிப்பதற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஏசி பில்டர்களை வழக்கமாக சுத்தம் செய்து பராமரிக்கத் தவறினால் இந்த பிரச்சனை அதிகரிக்கலாம். எனவே அவ்வப்போது ஏசி பில்டரை சுத்தம் செய்வதால் சுவாச பாதிப்புகளைக் குறைக்க முடியும். 

  3. கண் எரிச்சல்: நீண்ட நேரம் ஏசி பயன்பாடு வறண்ட மற்றும் எரிச்சலூட்டும் கண்களுக்கு வழிவகுக்கும். வறண்ட காற்று, லென்சில் அசௌகரியத்தை ஏற்படுத்தி, கண் தொற்று அபாயத்தை அதிகரிக்கும். எனவே கண்களை பாதுகாக்க சொட்டு மருந்து பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக ஏசியில் இருந்து வரும் காற்று நேரடியாக முகத்தில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். 

  4. சோர்வு மற்றும் தலைவலி: சில நபர்களுக்கு நீண்ட நேரம் ஏசியில் இருப்பதால் சோர்வு மற்றும் தலைவலி ஏற்படலாம். தொடர்ந்து குளிர்ந்த காற்றில் இருப்பதால் உடலின் இயற்கையான வெப்பநிலை பாதிக்கப்படும். இது அசௌகரியம் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே ஏசியை மிதமான வெப்பத்தில் பயன்படுத்துவது நல்லது. 

  5. சுற்றுச்சூழல் பாதிப்பு: ஏசியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால், பல உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டாலும், சுற்றுச்சூழல் பாதிப்பையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஏசி பயன்பாட்டால், அதிக ஆற்றல் பயன்பாடு மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளுக்கு வழிவகுக்கும். இது காலநிலை மாற்றத்திற்கு பங்களித்து, உலக வெப்பநிலையை அதிகரிக்கலாம். எனவே அதிக திறன் வாய்ந்த ஏசியை பயன்படுத்துங்கள். முடிந்தவரை இயற்கை காற்றோட்டம் அல்லது மின்விசிறி போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது. ஏசி இருந்தாலும் அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம். 

இதையும் படியுங்கள்:
Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 
People In AC

இப்படி அதிகமாக ஏசி பயன்படுத்துவதால் பல பாதிப்புகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க, ஏசியை முறையாகப் பயன்படுத்துங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com