'கப்ளி வீட்'டில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

Khapli Wheat
Khapli Wheathttps://thymill.com
Published on

ராக், இஸ்ரேல், சிரியா, ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் விளைவிக்கப்பட்டு, பழங்காலத்தில் எகிப்தியர்கள், ரோமானியர், மெசோபொடாமியன்களின் பிரதான உணவாயிருந்தது இந்த கப்ளி வீட் (Khapli Wheat).  மற்ற கோதுமைகளுடன் ஒப்பிடுகையில் இதன் தோற்றம் தனித்துவமானது; ஊட்டச் சத்துக்கள் அதிகம் உள்ளது.

கோதுமையில் டூரம் (Durum), பிரட் வீட் போன்ற நவீன ரகங்கள் வந்தபின் கப்ளியின் உபயோகம் படிப்படியாகக் குறையத் துவங்கியது. பின் இந்த பாரம்பரிய தானியத்தின் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு பெற்று  மீண்டும் அனைவரும் இதை உட்கொள்ள விரும்பியதால் தற்போது இந்தியாவில்  இது மஹாராஷ்ட்ரா மற்றும் சில பகுதிகளிலும் விளைவிக்கப்பட்டு மற்ற கோதுமைக்கு சிறந்ததொரு மாற்றாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. இதிலுள்ள 6 ஆரோக்கிய நன்மைகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

இதில் உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச் சத்துக்களான புரோட்டீன், வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நார்ச் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது குறைந்த அளவு க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் கப்ளி வீட் உணவுகளை உட்கொண்டால்  இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்க முடியும்.

மற்ற கோதுமையில் க்ளூட்டன் (Gluten) என்ற பசைத் தன்மை உள்ளது. இது க்ளூட்டன் சென்சிடிவிட்டி அல்லது சீலியாக் நோய் உள்ளவர்களின் உடலில் எதிர்மறை விளைவுகளை உண்டுபண்ணும். கப்ளி வீட் க்ளூட்டன் தன்மையற்றது. அதனால் அனைவரும் உண்ண ஏற்றது.

கப்ளி கோதுமையில் பல வகையான ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளன. இவை செல்களில் சிதைவு உண்டுபண்ணக்கூடிய ஃபிரிரேடிகல்களை எதிர்த்துப் போராடி, கேன்சர், இதய நோய் போன்ற நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுக்க உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
செஞ்சி கோட்டையிலிருந்து பாண்டிச்சேரிக்குக் கொண்டு செல்லப்பட்ட கலைநயமிக்க தூண்கள்!
Khapli Wheat

கப்ளியில் உள்ள அதிகளவு நார்சத்துக்களும், அதன் குறைந்த அளவு க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ள தன்மையும் இதய ஆரோக்கியம் காக்க பெரிதும் உதவி புரிகின்றன. சிறப்பான செரிமானத்துக்கும் உதவி, உடலின் மொத்த ஆரோக்கியம் காக்கவும் செய்கின்றன.

கப்ளியில் வைட்டமின் B3 மற்றும் வைட்டமின் C அதிகம் உள்ளன. இவை எலும்புகள், தசைகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. இதிலுள்ள நியாசின் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து, சருமத்தின் செல்கள் செழித்து வளரவும் சருமம் பளபளப்பு பெறவும் உதவுகின்றன.

கப்ளி மாவில் கஞ்சி செய்தும் சப்பாத்தி செய்தும் உண்ணலாம். மற்ற கோதுமை மாவை சமையலில் பயன்படுத்துவது போல் இதையும் எல்லா வகையிலும் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com