மாம்பழத்தை விட மாங்காயில்தான் சத்துக்கள் அதிகம் தெரியுமா?

Do you know the health benefits of mangoes?
Do you know the health benefits of mangoes?https://www.youtube.com

கோடைக் காலத்தில் மாம்பழமும் கிடைக்கும், மாங்காயும் கிடைக்கும். மாம்பழத்தை விரும்பும் அளவுக்கு மாங்காய்களை பலரும் விரும்புவதில்லை. உண்மையை சொல்லப்போனால், மாம்பழத்தை விட, மாங்காய்களில்தான் சத்துக்கள் அதிகம். உடலிலுள்ள நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் திறன் மாங்காய்க்கு உண்டு. மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் உட்பட பல சத்துக்கள் மாங்காயில் உள்ளன. மாம்பழத்தை விடவும் மாங்காயில், கலோரிகள் மிகவும் குறைவு. மாம்பழத்தை விடவும், மாங்காயில் நார்ச்சத்துக்கள் அதிகம்.

வெயில் காலத்தில் மாங்காய் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. காரணம் மாங்காயில் வைட்டமின் C சத்து அதிகம் உள்ளது. இதை தினமும் உட்கொண்டு வர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும், உடலின் நீர்ச்சத்தினை தக்கவைத்துக் கொள்ளும். உடல் சூட்டினால் ஏற்படும் நீர்க்கடுப்பை தீர்க்கும்.

மாம்பழத்தை விட மாங்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது. இதில் சர்க்கரை அளவும் குறைந்து இருக்கிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது மற்றும் கொழுப்பை குறைக்க வல்லது. இதை தினமும் சிறிய அளவில் உண்டு வந்தால் உடல் எடை தானாகக் குறையும். பொதுவாக, உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், மாம்பழத்தை சாப்பிடக்கூடாது என்பார்கள். ஆனால், உடல் எடையை குறைக்க நினைத்தால், கட்டாயம் மாங்காயை டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். காரணம், இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், மாங்காயை சாப்பிட்டு வரும்போது, உடலின் பிஎம்ஐ அளவு குறைவாக இருப்பதும், இடுப்பு சுற்றளவும் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, டயட் எடுக்கும்போது, சாலட்களில் இந்த மாங்காயை தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் அல்லது செரிமான பிரச்னை இருந்தாலும், மாங்காயை சாப்பிட்டு வந்தால் அனைத்து பிரச்னைகளையும் நீக்கி விடும். அஜீரண பிரச்னை இருப்பவர்கள், அசிடிட்டி பிரச்னை, வாந்தி, குமட்டல் இருப்பவர்கள், இந்த மாங்காயை சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும். மலச்சிக்கல் இருப்பவர்கள், மாங்காயை உப்பு மற்றும் தேனில் தொட்டு சாப்பிட்டால், தீர்வு கிடைக்கும். மாங்காய் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டல் மற்றும் காலை சோர்வு ஆகியவை மாங்காய் சாப்பிட சரியாகி விடும். ஆனால், அளவாக சாப்பிட வேண்டும்.

வைட்டமின் A மற்றும் வைட்டமின் C சத்துடன் சேர்ந்து மக்னீசியம் சத்து இதில் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றம் செய்கிறது. இதனால் சருமம் மற்றும் தலைமுடிக்கு நன்மை விளைகிறது. இரண்டையுமே பளபளப்பாக மாற்றுகிறது. மாங்காய் சாப்பிட்டு வருபவர்களுக்கு வியர்க்குருக்கள் வருவதில்லை. வெயில் காலத்தில் வியர்க்குரு பிரச்னைக்கு மட்டுமல்ல, வியர்வை பிரச்னைக்கும் மாங்காய் தீர்வு தருகிறது. உடலில் அதிகப்படியான வியர்வை வெளியேறினால், மாங்காயை ஜூஸ் செய்து குடித்தால், வியர்வையிலிருந்து தப்பிக்கலாம். வியர்வை மூலம், சோடியம் குளோரைடு மற்றும் இரும்புச்சத்துக்கள் உடலிலிருந்து வெளியேறுவதையும் தடுக்கலாம். வறட்சியடையாமல் நீர்ச்சத்துடன் காக்கப்படுகிறது. பச்சை மாங்காயை பேஸ்ட் போல அரைத்து, தலைமுடிக்கு பயன்படுத்தலாம். இந்த பேஸ்ட்டை பன்னீருடன் கலந்து முகத்துக்கும் பேஸ்பேக் போல பயன்படுத்தலாம்.

மாங்காய் உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. வைட்டமின் பி3 மிகக் குறைவான உணவுப் பொருட்களிலேயே உள்ளது. அதில் மாங்காயும் ஒன்று. இதய பிரச்னைகளை நீக்குவதில் இது மிகவும் பயனுள்ளது. இதய நோய் உள்ளவர்கள் தினமும் மாங்காய் சாப்பிட வேண்டும். இதய பிரச்னைகளை மாங்காய் தீர்க்கின்றன. இரத்த நாளங்களின் நீட்சித்தன்மையை அதிகரிப்பதோடு, புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு இந்த மாங்காய் உதவுகிறது.

மாங்காயில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது உங்கள் பற்களை வலுவாக்கும். ஈறுகளில் இருந்து இரத்தம் கசிந்தால், மாங்காயை பச்சையாக சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்னை நீங்கும். மேலும், உங்கள் பற்களில் ஒரு பளபளப்பை உருவாக்கும். பற்களின் வலிமைக்கு மாங்காய் துண்டுகளை மென்று சாப்பிடலாம். பற்களுக்கு வெண்மையும் கிடைக்கும், வாய் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
கொளுத்தும் வெப்பம் மக்களே உஷார்!
Do you know the health benefits of mangoes?

சர்க்கரை நோயாளிகளுக்கு மாங்காய் சிறந்தது. மாங்காயை தயிருடன் சேர்த்து பச்சடி போல சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும். கல்லீரலுக்கு மாங்காய் மிகவும் நல்லது. மாங்காயை சாப்பிடும்போது, கல்லீரலில் பித்த உற்பத்தி அதிகரிக்கும். இந்த பித்த திரவத்தின் உற்பத்தியானது, கல்லீரலில் படிந்திருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. அதேபோல, கல்லீரலில் படிந்துள்ள பித்தத்தையும், கல்லீரலை சுற்றியிருக்கும் கொழுப்புகளையும் வெளியேற்றி விடுகிறது.

மாங்காய் சாப்பிட்டு வருவதால், பித்தநீர் சுரப்பு அதிகரிப்பதோடு, குடலில் எங்காவது பாக்டீரியல் தொற்றுகள் இருந்தாலும் அவை சீராகி விடுகின்றன. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் கொண்டிருப்பதால், புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கவும், புற்று வராமல் தடுக்கவும் மாங்காய் தூண்டுகோலாகிறது. மாங்காயின் மகத்துவம் தெரிந்துதான் நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று அதை சமையலில் ஏதோவொரு வகையில் சேர்க்க வலியுறுத்தி வருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com