ரூயிபோஸ் டீயிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

Rooibos Tea
Rooibos Teahttps://www.bulletproof.com
Published on

ரூயிபோஸ் (Rooibos) டீ தெற்கு ஆப்பிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டது. அதிசயிக்கத்தக்க அற்புதம் நிறைந்த டீயாக இது கருதப்படுவது. இதில் சிவப்பு ரூயிபோஸ் மற்றும் க்ரீன் ரூயிபோஸ் என இரண்டு வகை உண்டு. சிவப்பு ரூயிபோஸ் நொதித்தல் (Fermentation) என்ற செயலுக்கு உட்படுத்தப்பட்டு ஆக்ஸிடேஷன் (Oxidation) ஆன டீ. அதனால் இதன் நிறம் சிவந்த பிரவுன் நிறமாக மாறியுள்ளது. இந்த டீயிலிருந்து மனதை மயக்கும் நறுமணம் ஒன்று உண்டாகும்.  க்ரீன் ரூயிபோஸ் டீ, அதே தேயிலை செடியின் தண்டு இலைகளைப் பறித்து வந்து ஆக்ஸிடேஷனைத் தவிர்த்து நேரடியாக மூடிய அறைக்குள் வைத்து வெப்பக் காற்றை அதன் மீது செலுத்தி உலர வைக்கப்படுவது.

இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்று பார்ப்போமானால் ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் அளவில் மட்டுமே வித்தியாசம் உண்டு. க்ரீன் ரூயிபோஸில் ஆஸ்ப்பலாத்தின் அளவு அதிகம். அதனால் கேன்சர் போன்ற நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயம் குறையும். இதன் சுவையும் சிறிது இனிப்பும் உள்ளதாயிருக்கும். மற்ற ஆரோக்கிய நன்மைகள் எல்லாம் இரண்டிலும் சமமாகவே உள்ளன.

இயற்கையாகவே காஃபின் என்ற பொருள் ரூயிபோஸ் டீயில் இல்லாததால் பிளாக் மற்றும் கிரீன் டீக்கு மாற்றாக இதை உபயோகிக்கலாம். இந்த டீயில் குர்செடின் (Quercetin) மற்றும் ஆஸ்ப்பலாத்தின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம். இவை தீங்கிழைக்கும் ஃபிரீ ரேடிக்கல்கள் மூலம் செல்கள் சேதமடைவதைத் தடுக்கும். இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

இரும்புச் சத்து உடலுக்குள் உறிஞ்சப்படும் செயலில் குறுக்கிட்டு குறையேற்படுத்தும் டான்னின் (Tannin) என்ற பொருள் சிவப்பு ரூயிபோஸ் டீயில் குறைவாக உள்ளது. இந்த டீ குறைந்த கலோரி அளவு கொண்டுள்ளதால் எடை பராமரிப்பிற்கு நன்கு உதவும்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் Fridge-ஐ முறையாக பராமரிக்க சில டிப்ஸ்! 
Rooibos Tea

ரூயிபோஸ் டீ புதிய கொழுப்பு செல்கள் உருவாவதைத் தடுத்து கொழுப்பு மெட்டபாலிசம் விரைவில் நடைபெற உதவும். நாம் உணவு உட்கொள்ளும்போது வயிறு சரியான அளவு நிரம்பியதும் இதிலுள்ள லெப்டின் என்ற ஹார்மோன் மூளைக்கு சமிக்ஞை (Signal) அனுப்பி தொடர்ந்து உணவு உண்பதைத் தடுத்து நிறுத்தும்.

ரூயிபோஸ் டீ கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கவும் உதவி புரிந்து இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். ஆஸ்ப்பலாத்தின் ஆன்டி டயாபெட்டிக் குணம் கொண்டது. இதனால் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவும். உடலின் வீக்கங்களைக் குறைக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

ரூயிபோஸ் டீ அனைத்து வயதினரும் அருந்தத் தக்கது. இதன் அமைதிப்படுத்தும் குணமானது ஆறு மாத ஹைப்பர் ஆக்ட்டிவ் குழந்தையைக் கூட நார்மலாக்க உதவும். இவை ஒவ்வாமை, பசியின்மை, தூக்கமின்மை, அஜீரணம், மனநலப் பிரச்னை ஆகியவற்றிற்கு நிவாரணம் அளிக்கும் எனவும் கூறப்படுகிறது.

சிலருக்கு இது ஹார்மோன் ஏற்றத் தாழ்வு மற்றும் ஒவ்வாமை போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதால் இதனை மருத்துவரின் ஆலோசனையுடன் அளவோடு அருந்துவதே நலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com