பபிள் டீயின் வரலாறு தெரியுமா?

பபிள் டீயின் வரலாறு தெரியுமா?
https://veggiefestchicago.org

பிள் டீக்கு (Bubble Tea) இன்று பிறந்த நாள். தைவானில் 1980ல் லியு ஹன் சீ (Liu Han-Chieh) என்பவரால் உருவாக்கப்பட்டது இந்த டீ. வேறு சிலர் இந்த அற்புதமான டீயை கண்டுபிடித்தவர் டூ சங்-ஹோ (Tu Tsung-Ho) என்றும் கூறுகின்றனர். போபா மில்க் டீ, பேர்ல் மில்க் டீ என்றும் இது அழைக்கப்படுகிறது.

பாலின் கிரீமை, மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் முத்துப் போன்ற ஒரு பொருளுடன் (Tapioca pearl) இணைத்து நம் நாவின் சுவை அரும்புகளுக்கு ஒரு தனித்துவமான சுவையையும், புத்துணர்வு தரும் ஓர் அனுபவத்தையும் தர வேண்டும் என எண்ணியதே பபிள் டீயின் கண்டுபிடிப்பில் உள்ள பின்னணியாகும். நாளடைவில் இந்தக் குளிர் பானமானது உலகளவில்  பிரபலமடைந்தது.

தேநீரை (Tea) பால், பழம், பழச்சாறு ஆகியவற்றுடன் சேர்த்து நன்கு கலந்து, பின் அதனுடன் கடைசியாக டேபியோக்கா முத்துக்களைச் சேர்த்துக் குலுக்கி மேற்பரப்பில் இனிப்பு மற்றும் நட்ஸ் வகைகளைப் பரப்பி குடிக்கக் கொடுப்பதே இதன் செய்முறையாகும். பொதுவாக இது குளிர் பானமாகவே தயாரிக்கப்பட்டாலும், கோடைக் காலத்தில் வெது வெதுப்பை விரும்பும் நபர்களுக்காக இது சூடேற்றும் பாணியிலும் தயாரித்து வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மனதை ரிலாக்ஸ் ஆக்கும் 5 எளிய வழிகள்!
பபிள் டீயின் வரலாறு தெரியுமா?

பயனாளிகளின் விருப்பத்திற்கிணங்க இதன் கூட்டுப்பொருளை மாற்றி மாற்றித் தயாரித்துத் தரவும் இதன் விற்பனையாளர்கள் தயாராக உள்ளதால் தினம் ஒரு சுவையை அனுபவிக்க வரும் கஸ்டமர்களின் எண்ணிக்கையும் விற்பனையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

பபிள் டீயில் ஆரோக்கிய நன்மை என்று கூறுவதற்கு ஏதுமில்லை என்றே சொல்லலாம். இது மனநிலையில் ஏற்றமும் சக்தியும் தரக் கூடியது. அதிக அளவு கொழுப்புச் சத்து, சர்க்கரை மற்றும் சிம்பிள் கார்போஹைட்ரேட்களே இதில் நிறைந்துள்ளதால் இந்த டீயை அடிக்கடி குடிப்பவர்களுக்கு இதய நோய், நீரிழிவு போன்ற நாள்பட்ட வியாதிகள் வரும் வாய்ப்பு அதிகம். இதை குறைந்த அளவில் குடிப்பதே உடலுக்கு நலம் தரும்.

நாளுக்கு நாள் உலகளவில் பபிள் டீ பிரபலம் அடை ந்து வருவதால் அதன் விற்பனையாளர்கள் பில்லியனர்களாக மாறுவதாகக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com