வைட்டமின் பி12 நமது உடலின் சிறந்த செயல்பாட்டிற்கு அவசியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும். இது சிவப்ப ரத்த அணுக்கள் உருவாக்கம், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் மற்றும் டிஎன்ஏ தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய செயல்பாடுகளில் பங்கு வகிக்கிறது. இந்தப் பதிவில் விட்டமின் பி12-ன் முக்கியத்துவங்கள், அதன் குறைபாட்டின் அறிகுறிகள் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.
வைட்டமின் பி12 என்பது நீரில் கரையக்கூடிய பி வைட்டமின்களில் ஒன்றாகும். இது இறைச்சி, மீன், பால் மற்றும் முட்டை போன்ற விலங்கு தயாரிப்புகளில் அதிகம் காணப்படுகிறது. சில தானியங்கள் மற்றும் சோயா பால் போன்ற தாவர உணவுகளிலும் விட்டமின் பி12 உள்ளது.
உடலுக்கு விட்டமின் பி12-ன் முக்கியத்துவங்கள்:
வைட்டமின் பி12 சிவப்பு ரத்த அணுக்கள் உருவாவதற்கு அவசியமான ஒரு ஊட்டச்சத்து. சிவப்பு ரத்த அணுக்கள் உடல் முழுவதும் ஆக்சிஜனை கொண்டு செல்லும் பொறுப்பைக் கொண்டவை. விட்டமின் பி12 குறைபாடு ‘பெர்னீஷியஸ் அனிமியா’ எனப்படும் ஒரு வகை ரத்த சோகைக்கு வழிவகுக்கும். இது சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் வெள்ளை ரத்த அணுக்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
விட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. இது நரம்பு செல்களை பாதுகாத்து, நரம்பு தூண்டுதல்களை விரைவாகவும், திறமையாகவும் கடத்த உதவுகிறது. விட்டமின் பி12 குறைபாடு நரம்பு சேதம், மறதி மற்றும் மன அழுத்தம் போன்ற நரம்பியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
டிஎன்ஏ தொகுப்பு மற்றும் பழுது பார்ப்பிற்கு வைட்டமின் பி12 அவசியமானது. டிஎன்ஏ நமது உயிரணுக்களின் மரபணு தகவல்களைக் கொண்டுள்ளது. வைட்டமின் பி12 குறைபாடு டிஎன்ஏ சேதத்திற்கு வழிவகுத்து, புற்றுநோய் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
மேலும், கொழுப்பை நிர்வாகித்தல், வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தியை பராமரித்தல் போன்ற பிற முக்கிய செயல்பாடுகளிலும் விட்டமின் பி12 பங்கு வகிக்கிறது. கிட்டத்தட்ட நமது மிக முக்கிய உடல் செயல்பாடுகளுக்கு விட்டமின் பி12 உதவியாக இருப்பதால், அதன் அளவு குறையாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
விட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள்:
சோர்வு
மூச்சுத் திணறல்
தலைவலி
மயக்கம் மற்றும் தலைசுற்றல்
கை மற்றும் கால்களில் குத்தும் உணர்வு
மனநிலை மாற்றங்கள்
ஞாபக மறதி
கவனம் செலுத்துவதில் சிரமம்
வாய்ப்புண்கள்
தோல் பிரச்சனைகள்
விட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும். சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம். மற்றவர்களுக்கு மேலே குறிப்பிட்ட பல அறிகுறிகள் ஏற்படலாம். ஒருவேளை உங்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருக்கலாம் என நீங்கள் நினைத்தால், மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது நல்லது.
விட்டமின் பி12 குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க பல்வேறு வழிகள் உள்ளன. பொதுவாக மருத்துவர்கள் இதற்கு பி12 சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ள சொல்வார்கள். இது தவிர நீங்கள் சில உணவுகளை சாப்பிடுவது மூலமாகவும் விட்டமின் பி12 பெற முடியும். எனவே ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க முற்படுங்கள்.