குதிரை முள்ளங்கி வேரின் மருத்துவ நன்மைகள் தெரியுமா?

Kattu Mullangi
Kattu Mullangi
Published on

குதிரை முள்ளங்கி தென்கிழக்கு ஐரோப்பாவில் உருவாகி, உலகம் முழுவதும் பரவியது. காட்டு முள்ளங்கி எனப்படும் இதன் வேர் பற்றிய ஆராய்ச்சி பல உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளது. குதிரை முள்ளங்கி வேரின் மருத்துவ நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

புற்றுநோய்: குதிரை முள்ளங்கி வேர்களின் கூறுபாடுகளிலிருந்து கிடைப்பது ‘தியோசைனேட்’ ஆகும். இது பல்வேறு வகையான புற்றுநோய்களை தடுக்கிறது. குதிரை முள்ளங்கி புரோக்கோலியை விட 10 மடங்கு அதிகமாக ‘க்ளுகோசினோலைட்ஸ்’ கொண்டிருக்கிறது. குளுக்கோஸினோ லைட்ஸ் ஒரு சாத்தியமான புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆன்டி ஆக்ஸிடென்ட்: குதிரை முள்ளங்கி வேர் பல பைடோ காம்பெண்டுகள் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஆக்சிஜனேற்ற வகைகளைக் கொண்டுள்ளன. குதிரை முள்ளங்கியில் வேறு சில ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு மரபணுக்களும் உள்ளன. கடுமையான தீங்கு விளைவிக்கும் ஆக்ஸிடேடிவ் அழுத்தத்தால் ஏற்படுகின்ற டி.என்.ஏ. சேதத்தை இந்த வேர் குறைக்கிறது.

சிறுநீர் பாதை நோய் தொற்று: இதிலுள்ள ஆன்டி பயாட்டிக் பண்புகள் சில சந்தர்ப்பங்களில் சிறுநீர் பாதை நோய் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும். இது வழக்கமான சிகிச்சையை விட சிறந்தது.

செரிமானம்: இந்த வேரில் உள்ள சில என்சைம்கள் செரிமானம் மற்றும் மலக்குடல் இயக்கங்களை தூண்டுகிறது. இந்த வேர் ஒரு பித்தநீர் சுரப்புக் தூண்டும் மருந்தாகக் கருதப்பட்டு பித்த பைகளில் உள்ள பித்த உற்பத்தியை தூண்டுகிறது.

வீக்கம்: ஒரு இத்தாலிய ஆய்வில் குதிரை முள்ளங்கி வீக்கத்தை சமாளிக்க உதவுவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல், கீல் வாதம் வலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. சீன மருத்துவத்தில் பல பகுதிகளில் வீக்கத்தை தடுக்க குதிரை முள்ளங்கி பயன்படுகிறது.

மெலஸ்மா சிகிச்சை: மெலஸ்மா என்பது முகத்தில் தோன்றும் பழுப்பு நிற பேட்ச் ஆகும். குதிரை முள்ளங்கி வேரை வெட்டி அதன் சாறை பாதிக்கப்பட்ட இடத்தில் படுமாறு நன்கு தேய்த்து சிறிது நேரம் உலர விடவும். பின்னர் அதனை குளிர்ந்த நீரினால் கழுவவும். இதனை வாரத்தில் ஒரு முறை அந்த பழுப்பு நிறம் மறையும் வரை பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ அந்தப் பதினாறு என்ன தெரியுமா?
Kattu Mullangi

முடி வளர்ச்சி: குதிரை முள்ளங்கியில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகளால் முடிகளை மீண்டும் உருவாக்க முடியும். மற்றும் முடி இழப்பை தடுக்க உதவும். வெறுமனே ஒரு மாவு போல் தயார் செய்து அதை தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு தேய்த்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

வயதான தோற்றம்: குதிரை முள்ளங்கி வேரில் சருமத்தை மினுமினுபாக்கும் பண்புகள் உண்டு. இதில் கிரீமை உண்டாக்கி பாதிக்கப்பட்ட இடங்களில் பூசி 20 நிமிடங்கள் கழித்து அதை குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

குதிரை முள்ளங்கியானது சாதா முள்ளங்கி, புரோக்கோலியை விட வேகமானதாகவும், பெரியதாகவும் வளர்கிறது. ஆகவே, அதை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் மிக எளிதானவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com